Northeast Monsoon: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும்.. அக்டோபர் டூ டிசம்பர்.. வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: தமிழகத்தில் நடப்பு ஆண்டில் இயல்புக்கு அதிகமாக வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை இயல்புக்கு அதிகமாக மழை பெய்யக்கூடும் என்றும், தென் இந்தியாவில் வழக்கமாக 33 செமீ மழை பதிவாகும், ஆனால் இந்த முறை 36 செமீ பதிவாகும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகம் என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தமிழகத்திலும் கூட பெரிதாக வெயில் தெரியாத அளவுக்கு மழை கொட்டியது. குறிப்பாக நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து விட்டு விட்டு மழை கொட்டியது.

அதிக மழைப்பொழிவு இருக்கும்
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் போது தான் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பது அனைவரும் தெரிந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நடப்பு ஆண்டில் இயல்பை விட அளவுக்கு அதிகமாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு ஆண்டில் அளவுக்கு அதிகமாக வடகிழக்கு பருவமழை இருக்கும். தென் இந்தியாவில் வழக்கமாக 33 செமீ மழை பதிவாகும், ஆனால் இந்த முறை 36 செமீ பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை இயல்புக்கு அதிகமாக மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15 அல்லது 16 ஆம் தேதிகளில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது. வழக்கமாக அக்டோபர் 20 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என்றும் ஆனால் நடப்பு ஆண்டில் முன்னதாகவே தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், இன்று (30-09-2025), வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (01-10-2025), மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 02 - ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா- வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 03-ஆம் தேதி வாக்கில் கரையை கடக்கக்கூடும்.
இன்று எங்கெல்லாம் கனமழை கொட்டும்
* இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* நாளை அக்டோபர் 1ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
* நாளை மறுநாள் (02-10-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 5 ஆம் தேதி வரை மழை தான்
* வரும் 3ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* வரும் 4ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* வரும் 5ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக்டோபர் 5ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையிலும் மழை பெய்யும்
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications