சென்னை மழையை விடுங்க.. எதிர்பாராத ஷாக் தந்த வடகிழக்கு பருவமழை.. வானிலை மையம் திடுக் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சமீப நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆனாலும் மழை போதுமான அளவு பெய்யவில்லை என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், தமிழ்நாட்டிற்கு போதுமான அளவுக்கு மழையை கொடுத்திருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை வழக்கமாக 328.4 மி.மீ மழையை பெறும். இந்த முறை 354 மி.மீ அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட -19% முதல் +19% கூடுதல் குறைவாக மழை பெய்தால் அது இயல்பான அளவு என கணக்கிடப்படுகிறது.

According to the Meteorological Department, the Northeast Monsoon rains in TN are 40% less than normal

அதேபோல திருநெல்வேலி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் இந்த மூன்று மாவட்டங்கள் இயல்பை விட 60% அதிக அளவு மழையைப் பெற்றுள்ளன. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்கள் 20% முதல் 59% வரை அதிக மழையை பெற்றிருக்கின்றன. ஆனால் அதே சமயம் திருப்பூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்கள் வழக்கத்தை விட 20% முதல் 59% வரை குறைவான மழை அளவை பெற்றிருக்கின்றன. மீதமுள்ள 21 மாவட்டங்கள் இயல்பான அளவில் மழையை பெற்றிருக்கிறது.

தென் மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாட்டில் சமீப நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் மழை போதுமான அளவில் பெய்யவில்லை என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த அவர், "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 40% குறைவாக பெய்திருக்கிறது. அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக இக்காலத்தில் 19 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+