ஜூலை டூ நவம்பர் வரை உயிரை காக்க ரூ 3 கோடி! டிசம்பரில் உணவுக்காக ரூ 2 லட்சம்.. அள்ளி கொடுத்த KPY பாலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலக்க போவது யாரு புகழ் நடிகர் பாலா தான் சம்பாதித்த பணத்தின் மூலம் இதுவரை ஆம்புலன்ஸுக்கு ரூ 3 கோடியும் உணவுக்காக ரூ 2 லட்சமும் செலவு செய்துள்ளார்.

பணம் சம்பாதித்து வைத்தால் என்ன ஊசியா போக போகிறது என நிறைய பேர் ஓடி ஓடி சம்பாதிக்கிறார்கள். சிலர் நியாயமாகவும் சிலர் அநியாயமாகவும் சம்பாதிக்கிறார்கள்.

Actor KPY Bala spend money for Ambulance to Michaung Cyclone

நியாயமாக சம்பாதித்தாலும் அநியாயமாக சம்பாதித்தாலும் சிலர் நலத்திட்ட உதவிகளை செய்கிறார்கள். இல்லாதோருக்கு கொடுக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் கலக்க போவது யாரு புகழ் பாலா பணத்துடன் புண்ணியத்தையும் சேர்த்து சம்பாதிக்கிறார்.

கலக்க போவது யார் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்தவர் பாலா. இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர் என பாலாவை சொல்ல முடியாது. ஆனாலும் சொற்ப சம்பளத்தில் அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

நலிந்த நடிகர்களுக்கும் உதவி வருகிறார். கடந்த ஜூலை மாதம் அறந்தாங்கி நமது இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். இதன் பிறகு ஆகஸ்ட் மாதம் மலைக்கிராமத்தில் பாம்பு கடித்து இறக்கிறார்கள் என்பதற்காக மலைவாழ் மக்களுக்காகவே ஒரு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து மூன்று சோளக்களை கிராமத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை செப்டம்பர் மாதம் வாங்கிக் கொடுத்துள்ளார். அது போல் அக்டோபர் மாதம் சென்னை கோயம்பேட்டில் உள்ள உணர்வுகள் அறக்கட்டளைக்கு ஒரு ஆம்புலன்ஸ் கேபிஒய் பாலா வழங்கினார். இது அவர் வழங்கிய 4ஆவது ஆம்புலன்ஸ் ஆகும். அது போல் 125 விவசாயிகளுக்கு மண் வெட்டி, கடப்பாறை, விவசாய உபகரணங்களையும் பாலா வழங்கினார்.

இந்த ஆம்புலன்ஸ்களை எல்லாம் அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிக் கொடுத்தார். இதற்காக யாரிடமும் பணம் கேட்கவில்லை. இப்படிப்பட்ட பாலாவிடம் சொந்தமாக கார் கூட கிடையாது. மிக்ஜாம் புயலால் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அனகாபுத்தூர் பகுதிகளில் 200 குடும்பங்களுக்கு தலா ரூ 1000 என ரூ 2 லட்சத்தை தனது சேமிப்பில் இருந்து அள்ளிக் கொடுத்துள்ளார்.

அது போல் உடல்நலம் குன்றிய ஒரு பெண்ணிற்கு தன்னால் முடிந்தது என கூறி ரூ 1 லட்சத்தை நவம்பர் மாதம் வழங்கியிருந்தார். அது போல் இன்னொருவருக்கு தன்னால் முடிந்த ரூ 30 ஆயிரம் என கூறி வழங்கினார். மேலும் தேவைப்பட்டால் தன்னிடம் கேட்குமாறு தெரிவித்திருந்தார். இப்படியாக கடந்த ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி வரை பாலா ஆம்புலன்ஸுக்காக ரூ 3 கோடியும், உணவுக்காக ரூ 2 லட்சமும் மற்றவர்களுக்கு செலவு செய்திருக்கிறார். இதே வேறு யாராவது இருந்தால் இந்த காசை என்ன செய்திருப்பார்களோ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+