நடிகர் எஸ்வி சேகரிடம் இருந்து இந்த நேரத்தில் இப்படி ஒரு வீடியோ.. சபாஷ் சொல்லும் நெட்டிசன்கள்
சென்னை : சென்னையில் மயிலாப்பூர், பட்டினம்பாக்கம்,எம்ஆர்சி நகர், அடையாறு, மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மெரினா கடற்கரை, சேப்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை கிண்டி, என சென்னையின் மையப்பகுதி உள்பட மாநகரம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் மைலாப்பூரில் கனமழைக்கு நடுவே எஸ்வி சேகர், கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சென்னையில் வானிலை மையம் எச்சரித்தபடி பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் கொட்டும் மழையிலும் குப்பைகளை அகற்றுவது, கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. சென்னையில் மயிலாப்பூர் கனமழையை பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் கழிவு நீர் அடைப்பை சரி செய்ய வந்திருக்கிறார்கள். அப்போது அவர்களை சந்தித்த நடிகர் எஸ்வி சேகர், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோவில், எஸ்வி சேகர் பேசுகையில், எல்லாருக்கும் வணக்கம், இந்த மாதிரியான சூழலில் கூட, சென்னை கழிவு நீர் அகற்றும் வாரிய ஊழியர்கள் வந்துள்ளார்கள்,, எங்கோ அடைப்பு இருப்பதாக வந்த புகாரின் பேரில் உடனே வந்துள்ளார்கள்.. அவர்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. பொதுவாக இயற்கை பேரிடர் ஏற்படும். அதே நேரம் மழைநீர் வடிகால்களில் நாம் என்ன செய்கிறோம் என்றால், பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை எல்லாம் அதற்குள் போட்டு விடுகிறோம்..

என் வேண்டுகோள் 🙏 pic.twitter.com/GWW3Oso2i0
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) October 15, 2024
நமக்கு வந்து குப்பை நமது வீட்டை விட்டு போனால் போதும் என்று நினைக்கிறோம்.. ஆனால் அது மறுபடியும் போய் அடைத்துக் கொள்கிறது.. இங்கு மயிலாப்பூரில் ஜெட்ராடிங் மிஷின் வந்துள்ளது.. நான் எம்எல்ஏவாக இருந்த போது வாங்கி கொடுத்தது தான் இந்த ஜெட்ராடிங் மெஷின்.. கழிவுகளுக்குள் மனிதன் இறங்கக்கூடாது என்பதற்காக வாங்கப்பட்ட மிஷின் ஆகும்.. 90லட்சம் ரூபாயில் இரண்டு ஜெட்ராடிங் மெஷின் எம்எல்ஏ நிதியில் வாங்கப்பட்டது ஆகும்.. இன்று வரை எல்லா எம்எல்ஏக்களும் வாங்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த சூழலில் நாம் நம்மை தற்காத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications