இப்பவே இந்த வெயில்.. கொளுத்தி எடுக்க காத்திருக்கும் அக்னி நட்சத்திரம்.. எப்போ ஆரம்பம் தெரியுமா?
சென்னை: இந்த ஆண்டு கத்தரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நடுவில் உள்ள 7 நாட்கள் மிகக் கடுமையான வெயில் தகிக்கும் என்பதால் மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஜூன் தொடக்கம் வரை தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தி எடுக்கும். இந்த ஆண்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிப்ரவரி முதலே வெயில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரமும், இந்த கடும் கோடை வெயிலுக்கு மத்தியில் நம்மை வதைத்து எடுப்பது வழக்கம்.

கொளுத்தி எடுக்கும் வெயில்
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே பல இடங்களில் 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இப்போதே வெயில் அனலைத் தாங்க முடியாமல் வீடுகளில் மின்விசிறிகள், ஏ.சி., ஏர்கூலர்களை ஓய்வு இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைத்து வருவதால் 'அக்னி' நட்சத்திரம் தொடங்கிய பின் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்குமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அக்னி நட்சத்திரம் எப்போது?
இந்த ஆண்டில் கத்தரி வெய்யில் எனும் அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட வெய்யில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்த காலகட்டத்தின் நடுவில் இருக்கும் ஒரு வாரம் வெயில் வாட்டி வதைக்கும்.
அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பத்திலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள அதிகப்படியான தண்ணீர் அருந்துவதும், உடல் அதிக சூடு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.
அக்னி நட்சத்திரம் என்பது என்ன?
பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலம் அக்னி நட்சத்திரம் என்றும், அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன் மட்டுமல்ல பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தின் நடுவில் உள்ள ஏழு நாள்கள் வெயில் மிக அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்து பஞ்சாங்க அடிப்படையில் அக்னி நட்சத்திரத்துக்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் சூரியன் அதிலிருந்து கிருத்திகை நட்சத்திரம் வரையில் பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலமாகக் கருதப்படுகிறது.
உஷார்
அதிக வெப்பம் நிலவும் கத்தரி வெயில் காலகட்டத்தில் மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதிக வெப்பநிலை வெப்பச் சோர்வு மற்றும் வெப்பப் பக்கவாதம் போன்ற வெப்பம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கலாம். இது உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம். வெப்பமான வானிலை அதிக வியர்வையை ஏற்படுத்தும். நீங்கள் போதுமான நீர் ஆகாரங்கள் பருகவில்லை என்றால் நீரிழப்புக்கு வழிவகுக்கும். நீரிழப்பு உடல் செயல்பாட்டை பாதிக்கலாம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை அதிகரிக்கலாம்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications