மிக் ஜாம் புயலை எதிர்கொள்ள எல்லா முன்னேற்பாடுகளும் தயார்! முழு வீச்சில் களமிறங்கிய தமிழக அரசு!
சென்னை: மிக் ஜாம் புயலை எதிர்கொள்ள எல்லா முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. கடந்த அக்டோபர் 21ஆம் தேதி முதலே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
இந்நிலையில் வங்கக் கடல் பகுதியில் புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து, அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு'

*பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முன் கூட்டியே நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
*பலத்த காற்றின் காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற போதுமான இயந்திர மர அறுப்பான்கள் மற்றும் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் இருக்கின்றன.
*மரம் விழும் நிகழ்வுகளாலும், கனமழையின் போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதாலும் காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்ய தயார் நிலையில் உள்ளார்கள்.
*மெட்ரோ ரயில், பெருநகர சென்னை மாநராட்சி, சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் தோண்டப்பட்டுள்ள குழிகளுக்கு தடுப்பு ஏற்படுத்தி, விபத்துகள் நிகழ்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
*புயலின் காரணமாக ஏராளமான மின் கம்பங்கள் சேதமடையும் என்பதால், போதுமான மின் கம்பங்கள் மற்றும் இதர மின் உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
*மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான நிறுவனம் மூலம் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
*நோய்த் தொற்று பரவலைத் தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தவும், முக்கியமாக நிவாரண முகாம்களில் மருத்துவக் குழுக்கள் பணியில் இருக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

*பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
*நிவாரணப் பணிகளுக்கு தேவையான நபர்களை முன்கூட்டியே கண்டறிந்து தேவைப்படும் இடங்களில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
*புயல் மற்றும் கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications