புயல் பாதை இதுதான்.. டிராக் பண்ணியாச்சு! இதுதான் ரொம்ப முக்கியம்.. "புள்ளி" வச்ச தமிழ்நாடு வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் மிக்ஜாம் புயல் எந்த திசையில் பயணம் செய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுக்க இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை , திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Almost the track and path of cyclone is confirmed says Tamil Nadu Weatherman

இந்த நிலையில்தான் வங்கக்கடலில் புயல் வலிமை அடைந்து வருகிறது. இந்த புயலின் பாதை எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதில், புயலின் பாதை மற்றும் டிராக் உறுதி செய்யப்பட்டுவிட்டது.

ஜிஎப்எஸ் மாடல் முதலில் பர்மா, ஒடிஷா பகுதிகளை எல்லாம் கணித்துவிட்டு கடைசியில் இது சென்னை அருகே வட தமிழ்நாட்டிற்கு அருகே வரும் என்று உறுதி செய்துவிட்டது. இந்த டிராக்கிங்கில் சிறப்பு என்னவென்றால் இந்த புயல் மேற்கு வடமேற்கு திசையில் செல்கிறது.

கடலுக்கு அருகே மேற்கு வடமேற்கு திசையில் செல்லும் புயல்கள் எல்லாம் தமிழ்நாட்டில் மிக அதிக மழையை கொடுத்துள்ளன. தமிழ்நாடு கடற்கரையை நோக்கி செங்குத்தாக கடந்த 15 ஆண்டுகளில், வர்தா, தானே அல்லது கஜா போல கடந்த புயல்கள் எல்லாம் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்தில் மிகவும் வலிமையாக இருந்துள்ளது. ஆனால் குறைந்த மழையைக் கொடுத்தது.

கடந்த 20 ஆண்டுகளில், SE இலிருந்து W-NW அல்லது S திசையில் இருந்து N நகரும் போது, ​​மூன்று சூறாவளிகள் தமிழ்நாட்டில் தங்கி மழை பெய்துள்ளன. அக்னி 2006, நிவார் 2020 மற்றும் நிஷா 2008 ஆகியவை பலத்த காற்றைக் காட்டிலும் அதிக மழையைப் பொழிந்தன. அதேபோல்தான் மிக்ஜாம் புயல் பயணம் செய்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை மையம்: 27-11-2023ம் தேதி காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து 28-11-2023 காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவியது.

வானிலை ரிப்போர்ட்: இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும்.

Almost the track and path of cyclone is confirmed says Tamil Nadu Weatherman

தென்இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

01.12.2023: : தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

02.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+