ரொம்ப பசிக்குது.. சென்னையில் மாடியில் காத்திருக்கும் மக்கள்! ஹெலிகாப்டரில் துவங்கிய உணவு விநியோகம்
சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் சென்னையில் இன்று இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கும் பணி தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டு மொட்டை மாடியில் காத்திருந்து அதனை பெற்று செல்கின்றனர்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த புயலால் தொடர்ந்து கனமழை பெய்தது.

குறிப்பாக கடந்த 3ம் தேதி நள்ளிரவில் பெய்ய தொடங்கிய மழை நேற்று முன்தினம் வரை தொடர்ந்து வெளுத்து வாங்கியது. இதனால் இந்த 4 மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சாலைகள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். நேற்று புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. இந்நிலையில் தான் சென்னையில் நேற்று முதல் மழை பெய்யவில்லை. இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இருப்பினும் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் தண்ணீரை வெளியேற்றுவது அவ்வளவு சுலபமானதாக இல்லை. இன்று காலையிலும் கூட பல இடங்களில் வெள்ளம் என்பது வடியவில்லை. இதனால் தொடர்ந்து அங்கு மீட்பு பணி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. பல இடங்களில் பொதுமக்கள் தரைதளத்தை காலி செய்துவிட்டு மேல்தளம் மற்றும் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அதோடு ஏராளமான மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். மீட்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம்களில் உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் வீடுகளில் சிக்கிய மக்களுக்கு உணவு என்பது கிடைக்காத சூழல் உள்ளது. இந்நிலையில் தான் தமிழக அரசு சார்பில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று பேரிடர் மீட்புத்துறை அமைச்சரான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறினார்.
அதன்படி இன்று சென்னையில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களின் வீட்டு மொட்டை மாடிகளில் காத்திருந்து உணவு பொட்டலகங்களை பெற்று செல்கின்றனர். இது உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications