வெயிலுக்கு மத்தியில்.. அடுத்த 1 மணி நேரம்.. விட்டு விளாசப் போகும் மழை.. 5 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், இன்று காலையில் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. நெல்லை, தென்காசி உள்பட 5 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, குமரி, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், தேனி, கடலூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. எனினும் மற்ற மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. நெல்லை, தென்காசியில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

5 மாவட்டங்களுக்கு அலர்ட்
ஆனால் இன்று பல்வேறு இடங்களிலும் காலையிலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. வானிலை மையமும் இனி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை எனவும், லேசானது முதல் மிதமான மழைக்கே வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது. இன்று காலையில் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அடுத்த 1 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் நெல்லை மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்கள், தென்காசி, தேனி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
5 ஆம் தேதி வரை
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 01-07-2025 மற்றும் 02-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04-07-2025 மற்றும் 05-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழைக்கு சான்ஸ்
சென்னையில் இன்று திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
இன்று முதல் 01-07-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும். இன்று முதல் 01-07-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்
இன்று முதல் 01-07-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 23° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம் என்று கூறப்பட்டு இருந்தது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications