திருச்செந்தூரையே திருப்பி போட்ட பெரு மழை.. சாத்தான்குளம், பாளையங்கோட்டை நிலையும் ரொம்ப மோசம்
சென்னை: நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 607.0 மிமீ மழை பதிவாகி இருக்கும் நிலையில், வானிலை கண்காணிப்பகங்கள், தானியங்கி வானிலை நிலையங்களில் பதிவான மழை அளவு என்ன? எந்தெந்த பகுதிகளில் அதிக மழை என்ற விபரத்தை விரிவாக பார்ப்போம்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

அதேபோன்று இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டு இருந்தது. அதேபோன்று நேற்று பெரு மழை கொட்டித் தீர்த்தது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரை பெய்த மழை அளவு:
கண்காணிப்பகங்கள்:
பாளையம்கோட்டை (திருநெல்வேலி) - 260.0 (17.30 மணி வரை)
கன்னியாகுமரி -174.0
தொண்டி (ராமநாதபுரம்) - 65.0
பாம்பன் (ராமநாதபுரம்) - 37.0
மதுரை - 27.0
கோயம்புத்தூர் - 10.0
மதுரை நகரம் - 5 (17.30 மணி வரை)
கொடைக்கானல் (திண்டுக்கல்) - 3.0 (17.30 மணி வரை)
அரியலூர் - 2.0 (17.30 மணி வரை)
வால்பாறை (கோயம்புத்தூர்) - 2.0 (17.30 மணி வரை)
புதுச்சேரி - 1.0
ஏற்காடு (சேலம்) - 1.0 (17.30 மணி வரை)
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) - 1.0
கடலூர் - 1.0
திருச்சிராப்பள்ளி - 0.7
கூனூர் (நீலகிரி) - 0.6 (17.30 மணிநேரம் வரை)
தானியங்கி வானிலை நிலையம்:
திருச்செந்தூர் (தூத்துக்குடி) - 607.0
திருப்பதிசரம் (கன்னியாகுமரி) - 134.0
விருதுநகர் - 124.0
கோவில்பட்டி (தூத்துக்குடி) - 42.5
அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்) - 3.5
பெரியகுளம் (தேனி) 0.5
விவசாய வானிலை பிரிவு:
அருப்புக்கோட்டை (விருதுநகர்) - 141.0
ராமநாதபுரம்) - 102.5
விருத்தாசலம் (கடலூர்) - 3.5
சிருகாமணி (திருச்சிராப்பள்ளி) - 2.0
விரிஞ்சிபுரம் (வேலூர்) - 1.5
வம்பன் (புதுக்கோட்டை) - 1.0
புதுச்சேரி - 0.5
தானியங்கி மழை அளவீடு நிலையங்கள்:
சத்தான்குளம் (தூத்துக்குடி) - 427.0
கமுதி (ராமநாதபுரம்) - 80.0
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 0.5
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications