ரூ.6000 நிவாரணத்தை விடுங்க! வீடு வீடாக கொடுக்கப்பட்டு "வேறு" டோக்கன்! குஷியில் மக்கள்.. இது எதுக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ரூ.6000 நிவாரணம் வழங்கப்பட உள்ள நிலையில் கூடுதலாக வேறு சில நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கி உள்ளது. ரூ. 6000 நிவாரணத்திற்கான டோக்கன் இன்னும் கொடுக்கப்படாத நிலையில்.. கூடுதலாக வேறு சில நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கி உள்ளது.

சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

Apart from Tamil Nadu government Rs.6000 relief fund, few more relief items will be given to people

நிவாரண தொகை அறிவிப்பு இதனடிப்படையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

டோக்கன்: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டோக்கன் எப்படி வழங்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. ₹6,000 நிவாரணம் வழங்க டிச.16 முதல் டோக்கன் வழங்கப்படும். வீடு வீடாக மாநகரட்சி அதிகாரிகள் டோக்கன்களை வழங்குவார்கள். ரேஷன் கடை அடிப்படையில் டோக்கன் வழங்கப்படும்.

அதன்பின் 10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும். டோக்கனில் எந்த தேதியில் ரேஷன் கடைக்கு வர வேண்டும் , எந்த நேரத்திற்கு வர வேண்டும், எந்த ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்பது போன்ற விவரங்கள் இருக்கும்.

வேறு டோக்கன்; சென்னையில் இதற்கு டோக்கன் கொடுக்கப்பட உள்ள நிலையில்.. ஏற்கனவே அரிசி தொடர்பான இன்னொரு டோக்கன் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கும் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மக்களுக்கு வீடு வீடாக சென்று இந்த டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இது 6000 ரூபாய் கொடுப்பதற்கான டோக்கன் கிடையாது. மாறாக மக்களுக்கு அரிசி, காய்கறிகள் கொடுப்பதற்கான டோக்கன் ஆகும். ஏரியா வாரியாக கவுன்சிலர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

இது நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் ஆகும். அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் இந்த டோக்கன் வழங்கப்படுகிறது. அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏரியா அளவில் வழங்குவதற்காக இந்த டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

கூடுதல் நிவாரணம் வழங்கப்படும்: மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்; பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/- ஆக உயர்த்தி வழங்கிடவும்:

Apart from Tamil Nadu government Rs.6000 relief fund, few more relief items will be given to people

என்னென்ன நிவாரணம்: மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7.410/-லிருந்து, ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்: எருது. பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000/- என்றிருந்ததை, ரூ.37,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்: வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக m.3,000/- என்றிருந்ததை, ரூ.4,000/- உயர்த்தி வழங்கிடவும்:

படகுகள் நிவாரணம்: சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட). ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு இலட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+