மேலே அப்படியே சுத்துதே.. தமிழ்நாட்டில் இங்கெல்லாம் இன்று மழை.. வானிலை வல்லுனரின் முக்கிய வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் வானிலை எப்படி இருக்கும், மழைக்காலம் எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் முடிவிற்கு வந்து உள்ளது. கடந்த மாதங்களில் வாட்டி வதைத்துக்கொண்டு இருந்த கடுமையான வெயில் ஒரு வழியாக முடிவிற்கு வந்துள்ளது. வெயிலின் தாக்கம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.

Are these places going to see heavy rain in Tamil Nadu and Chennai? Weather Report

கேரளாவில் மழை காலம் காரணமாக மழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கும் நிலையில் தமிழ்நாட்டிலும் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டின் வானிலை எப்படி இருக்கும், மழைக்காலம் எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள கணிப்பில், சென்னையில் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் உள்ளது. நேற்று போலவே இன்றும் நாள் மேகமூட்டத்துடன் தொடங்கி உள்ளது. வங்கக்கடலின் மேலே உள்ள வளிமண்டல புயல் சுழற்சி காரணமாக இரவு நேரங்களில் வட தமிழ்நாட்டில் இடியுடன் மழை பெய்யும்

அதேபோல் தெற்கு ஆந்திர பிரதேசத்தில் மழை பெய்யும். 1- 2 இடங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்புகளும் உள்ளன என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறியுள்ளது. அவர்கள் வெளியிட்டு உள்ள வானிலை அறிவிப்பில், கிரிக்கெட்டில் பொதுவாக பவர்ப்ளே என்பது வலுவான எதிரணியின் பவுலிங்கிற்கு இடையே புகுந்து அதிரடியாக பேட்டிங் செய்ய உதவியாக இருக்கும். ரன் ரேட்டை உயர்த்துவதற்கு மட்டுமின்றி எதிரணியின் அதிரடி பவுலிங்கை காலி செய்யவும் காரணமாக இருக்கும். அதேபோல்தான் மழை காலத்திற்கும் பவர்ப்ளே தேவை.

முக்கியமாக சாதகமற்ற சூழ்நிலைக்கு இடையே மழையை கொடுக்க வானிலைக்கும் பவர்ப்ளே என்பது தேவை. அப்படி ஒரு சூழ்நிலைதான் இந்த 2023 மழை காலத்திற்காக உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. கேரளாவில் இந்த வருடம் தாமதமாக மழைக்காலம் தொடங்கியது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்து மழை காலம் தீவிரம் அடைந்தது.

ராஜஸ்தானில் சில பகுதிகள், ஹரியானாவில் சில பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் மழை நன்றாக பெய்து வருகிறது. இந்த இடங்களிலும் விரைவில் மழை பெய்யும். இந்திய கடலின் மேற்கு பகுதியில் திடீரென உயர் மட்டத்தில் மேடன்-ஜூலியன் அலைவு ஏற்படுகிறது. இதுதான் இந்த மழைக்காலத்தில் பவர்ப்ளே போல செயல்பட போகிறது. இந்த மாற்றம் காரணமாக அடுத்த 2 வாரங்களுக்கு நாடு முழுக்க பரவலாக மழை பெய்யும்.

மழைக்காலம் லேட்டாக தொடங்கியதால் ஏற்பட்ட மழை இழப்பை சரி செய்யும் விதமாக நாடு முழுக்க மழை பெய்யும். இன்னும் உறுதியாக சொல்ல முடியாது என்றாலும்.. இன்னும் மழைக்காலத்தின் 3/4 பகுதி முழுமையாக வர வேண்டும் என்ற நிலை இருந்தாலும் கூட.. இந்த காலகட்டம் மழைக்காலத்தின் ஆக்டிவ் சீசனாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டம் இந்த மழைக்காலத்தின் ஹைலைட் காலகட்டமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. வங்கக்கடலில் நிலவும் மாற்றங்களும் கூட இந்த சூழ்நிலைக்கு தகுந்தபடியே இருக்கும். கடந்த காலங்களில் பெரும்பாலும் வட தமிழ்நாட்டின் அட்சரேகைக்கு மேலே பருவமழை காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் போது அது இடியுடன் கூடிய மழையாக பெய்யும், இது பருவமழையை பொறுத்து ஓரிரு நாட்கள் நீடிக்கும்.

இதேபோல் வரும் நாட்களில்.. பெரும்பாலும் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இதேபோல் மழை பெய்யும். முக்கியமாக வட தமிழ்நாட்டில் இதேபோல் மழை பெய்யும். முக்கியமாக மேற்கு காற்று காரணமாக மழை மேகங்கள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும். இதனால் மழை சில மணி நேரங்கள் பெய்தாலும் மிகவும் வலுவாக இருக்கும்.

Are these places going to see heavy rain in Tamil Nadu and Chennai? Weather Report

வார இறுதியில் தற்போதைய தாழ்வு பகுதியானது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து அதன் வாழ்க்கைச் சுழற்சியின் முடிவை அடையத் தொடங்கும் போது தெற்கு விரிகுடாவில் மத்திய வெப்பமண்டல மட்டங்களில் புதிய சுழற்சியை உருவாக்குவதைக் வானிலை மாதிரிகள் நமக்கு காட்டுகின்றன. இந்த சுழற்சி காரணமாக சென்னை மற்றும் வட தமிழ்நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்டது போலவே மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. பருவமழை பவர்பிளேயை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு முன்பு, தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கு ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பை இது வழங்குகிறது.

ஜூலை 1 வார இறுதியை அடையும் முன் நல்ல மழை பெய்யும். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டில் குறைந்தது 2 மாவட்டங்களிலாவது 250 மிமீ மழை பெய்து டார்கெட்டை அடையும் வாய்ப்புகள் உள்ளன என்று சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+