தெய்வமே வந்துட்டயா.. சென்னையில் சட்டென மழை வந்ததும்.. இதுதான் இயற்கை நடத்திய மேஜிக்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. சென்னை வானிலை மையத்தின் எச்சரிக்கைப்படியே சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சில நாட்களாக வெப்பகாற்று வீசிய சென்னையில், இடி மின்னலுடன் பெய்யும் மழையால் குளுகுளுவான வானிலை மாறியது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பக்காற்று வீசி வருகிறது. இரவில் புழுக்கம் அதிகமாகவும், பகலில் வெயில் அதிகமாகவும் இருந்து வந்தது. இதனால் எப்போது மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஏனெனில் பொதுவாக அதிகப்படியான வெயில் மற்றும் புழுக்கம் ஏற்படும் போது எல்லாம், சென்னையை குளிர்விக்கும் வகையில் மழை பெய்வது வழக்கம். அந்த வகையில் இன்றும் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இன்று காலை முதலே வெயில் கடுமையாக இருந்தது.

இதனால் மாலைக்குள் மழை வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. எதிர்பார்த்தபடியே மாலை 4 மணி அளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த பரவலான மழை காரணமாகமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னையில் வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அடையாறு, எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.
இதேபோல் கிண்டி, வேளச்சேரி, பள்ளக்கரணை, பெருங்குடி, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. மிக குறைந்த நேரமே நீடித்த இந்த மழையால் பூமி குளிர்ந்து, வானிலையே குளுகுளுவென மாறியது. கடுமையான வெப்பத்திற்கு நடுவே பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. நாளை மற்றும் அக்டோபர் 8ம் தேதி வரையிலும் தமிழகத்தின் அனேக இடங்களில் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications