ஆவடியில் பேய் மழை! ஒரே நாளில் இவ்வளவு செ.மீ. மழையா! வளசரவாக்கத்தை விட மோசம் போலயே!
சென்னை: ஆவடியில் கடந்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்துள்ளதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவி வரும் மிக்ஜாம் புயல் புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகல் மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வரக் கூடும். தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகரும்.
நாளை காலை தெற்கு ஆந்திரா கடற்கரை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை நெருங்கி வருவதால் சென்னையில் விடிய விடிய சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் தலா 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சோழிங்கநல்லூர், பெருங்குடி, கோடம்பாக்கத்தில் தலா 18 சென்டி மீட்டர் மழைப்பொழிந்துள்ளது. மதுரவாயல், கத்திவாக்கம், அம்பத்தூர், மீனம்பாக்கம் பகுதிகளிலும் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் எல்லாம் குறைந்த நேரத்தில் அதிக மழை பொழிவை கொடுத்துள்ளது.
இதே போன்று, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. சென்னை எண்ணூரில் மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியது. மிக்ஜாம் புயல் பழவேற்காட்டில் இருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ளது. இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது.
ஆவடியில் மிக கனமழை கொட்டி வருகிறது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான நிலவரத்தை பார்த்தோமேயானால் ஆவடியில் மட்டும் 278.50 மி.மீ. மழை பெய்துள்ளது. இது எக்ஸ்ட்ரீம் மழை பெய்து வருகிறது. தாமரைப்பாக்கத்தில் 163 மி.மீ மழை பெய்துள்ளது.
அது போல் கும்மிடிப்பூண்டி அருகே கனமழை பெய்ததால் 153 மிமீ மழை பெய்துள்ளது. கூவம் ஆற்றுக்கு ஏராளமான நீர் வரத்து வரும் என தெரிகிறது. வளசரவாக்கத்தில் 203.1 மி,மீ, மழை பெய்துள்ளது. அண்ணாநகர் மேற்கு பகுதியில் 194.7 மி.மீ. மழை பெய்துள்ளது. மடிப்பாக்கத்தில் 189.3 மி.மீ. மழை பெய்துள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications