பெங்களூரில் இன்று முதல் 6 நாள் மழை வெளுக்கப்போகுது.. திங்கட்கிழமை வரை ‛மஞ்சள் அலர்ட்’

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் இன்று காலை முதல் பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று முதல் வரும் அக்டோபர் 27 ம் தேதி வரை பெங்களூர் முழுவதும் மழைக்கான ‛மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் நகரில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நகரின் பல இடங்களில் லேசாக மழை பெய்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தான் காரணம். இதன் காரணமாக கர்நாடகாவில் பெங்களூர் உள்பட பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

bengaluru rain weather

அந்த வகையில் பெங்களூரில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கான ‛மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ‛மஞ்சள் அலர்ட்' விடுக்கப்படும் இடத்தில் குறைந்தபட்சம் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பொழிய வாய்ப்பு இருக்கும். அதாவது 6.4 செமீ முதல் 11.5 செமீட்டர் மழை பெய்யலாம்.

அதன்படி இன்று (அக்டோபர் 22) பெங்களூரில் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாக இருக்கும். அதன்பிறகு நாளை (அக்டோபர் 23) ம் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதேபோல் இடைவிடாமல் மழை பெய்யும். வெப்பநிலை அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

அதன்பிறகு அக்டோபர் 24ம் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். அக்டோபர் 25ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

அக்டோபர் 26 ம் தேதி லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். அக்டோபர் 27 ம்தேதி மாலை நேரத்தில் சாரல் மழை பெய்யும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது.

அதேபோல் பெங்களூர் மட்டுமின்றி கர்நாடகாவின் பிற மாவட்டங்களான ஹாசன், மைசூரு, துமகூரு, மண்டியா, ராமநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல்இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இங்கு காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா, சாம்ராஜ்நகர், ஹாசன் மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்புள்ளதாகவும், பல்லாரி, சித்ரதுர்கா, தாவணகெரே, விஜயநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+