வங்க கடலில் மீண்டும் மாற்றம்.. மீனவர்களுக்கு வந்த வார்னிங்.. இன்னும் 4 நாளைக்கு வெப்ப நிலை உயருமாமே
சென்னை: தமிழகத்தில் வரும் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் 1 முதல் 28-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், தென்மேற்கு பருவமழை இயல்பாக 47.8 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில், நிகழாண்டு 107.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மழை பொழிவு: கடந்த மே மாதத்தில் இயல்பைவிட 19 சதவீதம் அதிக மழை பதிவான நிலையில், தற்போது இயல்பைவிட 124 சதவீதம் அதிகமாகவே மழை பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக நீலகிரியில் 292.3 மி.மீ., கோவை - 231.5, ராணிப்பேட்டை - 206.7, கன்னியாகுமரி - 200.4 மி.மீ. பதிவானது. மேலும், குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 6.2 மி.மீ. மழை பெய்துள்ளது.
சென்னை: சென்னையை பொறுத்தவரை, ஜூன் மாத தொடக்கத்திலிருந்து பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தும், இரவு நேரங்களில் மழை பெய்தும் வருகிறது... வழக்கமாக சென்னையில் 58.8 மி.மீ. மழை பதிவாகும் நிலையில், இந்த முறை 200.4 மி.மீ. மழை பதிவானது. அதாவது இயல்பைவிட 241 சதவீதம் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அத்துடன், ஜூலை 2 வரை தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெயில் தாக்கம்: அதுமட்டுமல்ல, தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 4 இடங்களில் வெயில் சதமடித்த நிலையில், சனிக்கிழமை (இன்று ஜூன் 29) முதல் ஜூலை 2 வரை தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரிக்கும் எனம் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில் உள்ளதாவது:
"தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சனி முதல் செவ்வாய்க்கிழமை வரை (ஜூன் 29-ஜூலை 2) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 4 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது. அதன்படி, மதுரை நகரம், மதுரை விமான நிலையம் - (தலா) 101.84, வேலூா் - 101.12, தூத்துக்குடி - 100.4 டிகிரி வரை வெப்பம் பதிவானது.
மிதமான மழை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (ஜூன் 29) முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): அவலாஞ்சி (நீலகிரி) - 110, சின்னக்கல்லாா் (கோவை) -80, மேல் பவானி (நீலகிரி)- 70, நாலுமுக்கு (திருநெல்வேலி), வால்பாறை (கோவை), விண்ட் வொத் எஸ்டேட் (நீலகிரி), சின்கோனா (கோவை), எமரால்டு (நீலகிரி), உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை (கோவை) - தலா 40.
மீனவர்கள்: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 29,30 -ஆகிய தேதிகளில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 29 முதல் ஜூலை 2 வரை மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications