Cyclone Murasu: போடு தகிட தகிட.. வங்கக் கடலில் கருப்பு பூதம்! ‘முரசு’ புயலால் ஜில்ஜில் மோடுக்கு மாறும் தமிழ்நாடு!
சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில் வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து 'முரசு' புயலாக மாறக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
எல் நினோ தாக்கம் காரணமாக இந்த ஆண்டு மிகக் கடுமையான வெப்பம் இந்தியா முழுவதும் நிலவியது. வழக்கமாக பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை கை கொடுக்காத நிலையில் கடுமையான பஞ்சம் ஏற்படும் சூழல் உருவானது.

இந்த நிலையில் எல் நினோ தாக்கம் காரணமாக தென்மேற்கு பருவமழை விடை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காட்சி அளித்த தாழ்வு மண்டலம் கடந்த 26 ஆம் தேதி 'ஒர்ணாப்' புயலாக வலுப்பெற்றது.
தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்த ஒர்னாப் புயல் மிகத் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் விசாகப்பட்டினம் பபாட்லா இடையே கரையை கடந்தது. இதனால் தமிழகத்திலும் மூன்று நாட்களுக்கு நல்ல மழை பெய்தது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மழையும் விடைபெற்றது. தற்போது வறண்ட வானிலையே நிலவி வரும் நிலையில் தற்போது மற்றொரு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது வங்க கடலில் முரசு புயல் உருவாகக் கூடும் எனவும் இதனால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதாவது தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அதே நிலையில் நீடிக்கும் இந்த தாழ்வுப் பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், அதன் பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் இது வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது
.
மேற்கு வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரும் இந்த புயலானது, நவம்பர் 2ஆம் தேதி மாலை ஆந்திர பிரதேச கடற்கரை அருகே உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிக்கு வந்து சேரும் எனவும், இதனால் அடுத்தடுத்த நாட்களில் கடலோரப் பகுதிகளில் வானிலை மாறக்கூடும் என கூறியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
2026 ஆம் ஆண்டின் வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாக போகும் 2வது புயலாக இது இருக்கும். ஒருவேளை இந்த புயல் உருவானால் அதற்கு இந்திய அரசு பரிந்துரைத்த 'முரசு' என்ற பெயர்தான் வைக்கப்பட உள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலும் வடமேற்கு மாவட்டங்களிலும் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வட கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை எதிர்ப்பார்க்கலாம் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.


Click it and Unblock the Notifications
