திடீரென வந்த பெரிய கூண்டு.. 2 பேர் சிக்கிய வேளச்சேரி பள்ளத்தில் 4வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்!
சென்னை: வேளச்சேரியில் 56 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி 3 நாட்களைக் கடந்துள்ள நிலையில், மீட்புப் பணிக்காக பெரிய கூண்டு ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் பெய்த கன மழையால் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் இன்னும் முழுமையாக மழை நீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெள்ள நீர் சூழ, அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை கொட்டிய நிலையில், திங்கட்கிழமை பகலில், வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள எல்.பி.ஜி பெட்ரோல் பங்க் அருகே கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டு, 50 அடி ஆழத்துக்கும் அதிகமான பள்ளமாக மாறியது. அருகில், கண்டெய்னரில் வசித்து வந்த கட்டுமான தொழிலாளர்கள் 4 பேர் அந்தப் பள்ளத்தில் சிக்கினர். அதில், 2 பேர் மீட்கபட்ட நிலையில் மேலும் 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து 4வது நாளாக நடைபெற்று வருகிறது.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் தமிழக தீயணைப்பு வீரர்களும் இணைந்து அந்த இருவரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தனியார் நிறுவனம் சார்பில் கட்டப்படும் கட்டடத்திற்கு அடித்தளம் போடுவதற்காக தொழிலாளர்கள் அங்கு பள்ளம் தோண்டி வந்துள்ளனர். இந்நிலையில் புயல் காரணமாக பெருமழை பெய்ததால் சிறிய அளவில் தோண்டப்பட்ட பள்ளம் விரிசல் விட்டு 80 அடி பள்ளமாக மாறிய நிலையில், உள்ளே தொழிலாளர்கள் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உள்ளே சிக்கியுள்ள 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. பள்ளம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டிருப்பதால் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வந்தனர். எனினும், நீர் தொடர்ந்து ஊறியதால், ராட்சத பம்ப்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றியும், இன்னும் பள்ளத்தில் நீர் தேங்கி உள்ளது.
4வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் சூழலில், அங்கு பள்ளத்தில் இருந்து மழைநீரை அகற்றும் திட்டம், பலன் அளிக்காத நிலையில், அதிக திறன் கொண்ட பெரிய டி.சி கிரேன் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெரிய கூண்டு ஒன்று அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சுரங்கப் பணிகள், பெரிய கிணறுகளில் பயன்படுத்தப்படும் கூண்டு அங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆழமான கிணறு போன்ற பகுதிகளில், அல்லது தீ விபத்துகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க, மனிதர்கள் நேரடியாகச் செல்ல முடியாத நிலையில், பெரிய அளவிலான கூண்டு உள்ளே இறக்கப்பட்டு, அதன் மூலம் மீட்கப்படுவது வழக்கம். இந்நிலையில், அதுபோன்ற கூண்டு, வேளச்சேரியில் தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெறும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, கிரேனில் பொருத்தப்பட்டது.
இந்த கூண்டு வாயிலாக, மீட்புப் படையினர், தண்ணீர் தேங்கியுள்ள பள்ளத்திற்குள் அனுப்பப்படுவார்களா எனத் தெரியவில்லை. இதுவரை, பள்ளத்தில் இருந்து நீரை வெளியேற்றும் முயற்சிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், இந்த கூண்டு வரவழைக்கப்பட்டுள்ளதன் மூலம், மீட்பு பணிக்ள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications