கோவை, நீலகிரி, சேலம் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன் தினம் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்றும் ஒருசில இடங்களில் மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் மழையால் நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சிங்கித்துறை கடற்கரையில் 200க்கு மேற்பட்ட மீன்வளக் கூடங்கள் சேதமடைந்தன. மேலும் சூறாவளி காற்றினால் வீட்டின் மெற்கூரைகளும் சேதமடைந்தன. இதேபோன்று நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் நேற்று ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று ஈரோடு, கோவை, சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications