தீபாவளி முடிஞ்சது.. ஆனா மழை இன்னும் முடியல! சென்னை + 17 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னை உட்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த ஜூலையில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலான மழைப்பொழிவை கொடுத்திருக்கிறது. ஆனால் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை போதுமான அளவுக்கு மழை பெய்யவில்லை. இப்படி இருக்கையில் வடகிழக்கு பருவமழை பரவலாக மழையை கொடுத்திருக்கிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை நெற்று வரை இயல்பைவிட 25% அதிகமாக பெய்திருக்கிறது. அதேபோல, டெல்டா மாவட்டங்களிலும் மழை அதிக அளவு பெய்திருக்கிறது.

தீபாவளியான நேற்றும், நேற்று முன்தினமும் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியிருக்கிறது. குறிப்பாக, அக்.30ம் தேதி சென்னையில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ வரை மழை பதிவானது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் புகுந்தது. இப்படி இருக்கையில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது, காலை 10 மணி வரை சென்னை உட்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூரில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தீபாவளியையொட்டி 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடுக்கப்பட்டிருக்கிறது. தீபாவளியான நேற்று கறி எடுத்து சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்த மக்கள், இன்று வெளியே கிளம்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால் மழை காரணமாக இந்த திட்டத்தை ஒத்தி வைக்க மக்கள் யோசித்து வருகின்றனர்.
முன்னதாக மழை குறித்து நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சுனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவம்பர் 3ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04.11.2024 முதல் 06.11.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications