அடுத்த 3 மணி நேரம்.. கொட்டப்போகும் கனமழை.. சென்னை + திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
சென்னை: இன்று மாலை 6.30 மணி வரை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தஞ்சை, திருச்சி, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்தது. கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை காலையில் இருந்து மதியம் வரை வெயில் வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் மாலை 3.30 மணியளவில் சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை 6.30 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தமிழகத்தில் இன்று மாலை 6.30 மணி வரை சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல இன்று மாலை 6.30 மணி வரை வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என்று கூறியுள்ளது. லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கோவை உள்ளிட்ட மலைப்பகுதிகள், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதேபோன்று நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தத்.












Click it and Unblock the Notifications