வெள்ளக்காடாக மாறிய குமரி.. ஒரே நாளில் 16 செமீ மழை பதிவு.. இன்றும் கனமழை எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 16 செமீட்டரும், குமரியில் 13 செமீ மழையும் பதிவானது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இந்த நிலையில் இன்றும் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. குறிப்பாக குமரி மற்றும் நெல்லையில் கனமழை கொட்டியது. நெல்லையில் ஒருசில இடங்களில் மழை பெய்தாலும், குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது.

rain weather kumari

குறிப்பாக நாகர்கோவில், இரைச்சகுளம், பூதப்பாண்டி பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக அஞ்சுகிராமம் அருகே நரிக்குளம் மற்றும் நாச்சியார்குளம் நிரம்பி லீபுரம் பகுதியில் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கன்னியாகுமரி - அஞ்சுகிராமம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர்.

இதேபோல் ஆறுகள் மற்றும் குளங்களில் தண்ணீர் நிரம்பியது. பெரும்பாலான இடங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் நேற்று குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.

குமரி மட்டுமின்றி, நீலகிரி, கோவை, ஈரோடு, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று கனமழை பெய்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது.

தேனி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்தது. போடி அருகே கனமழை பெய்தது. ஊத்தாம்பாறையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் பெரியகுளம் அருகே மானுத்தூ ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சோத்துப்பாறை அணைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றும் குமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்றும் வானிலை மையம் குமரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படியே குமரியில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்திருந்தது.

மழை அளவு:
தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று குமரி மாவட்டம் கொட்டாரத்தில் 16 செமீ மழை பதிவாகியது. குமரியில் 13 செமீ மழை பதிவானது. கோத்தகிரி எஸ்டேட் - 14. 3 செமீ, கோத்தகிரி 14 செ.மீ, ஆலக்கரை எஸ்டேட் - 13.7 செமீ, அதார் எஸ்டேட் - 12.5 செமீ, சோத்துப்பாறை - 12.3 செமீ, பரளியாறு - 12.3 செமீ, பில்லிமலை - 12 செமீ, மயிலாடி - 11 செமீ, குன்னூர் - 10.5 செ.மீ, பெருஞ்சாணி - 10.1 செமீ, சுருளக்காடு 10 செமீ மழை பெய்துள்ளது.

தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக 12.3 செமீ மழை பதிவானது. பெரியாறு அணை - 7.3 செமீ மழை, தேக்கடியில் 6 செமீ மழையும், பெரியகுளத்தில் 5.2 செமீ மழையும் பதிவானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+