மறையுது மழை.. படருது பனி.. என்ன நடக்கும் இனி? ஒரு வாரம் தமிழக வானிலை இதான்! சென்னையில் என்ன ஸ்பெஷல்?
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், பனி மூட்டம் அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "நேற்று டிசம்பர் 30 ஆம் தேதி தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி அமைந்து இருக்கும் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று அதே பகுதிகளில் நிலவி வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தெற்கு அரபிக் கடல் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும்.

இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரம் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் உறை பனிக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. ஜனவரி 2 ஆம் தேதி முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்காக வானிலை மையம் வெளியிட்டு இருக்கும் வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 48 மணி நேரம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை சமயத்தில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவை பொருத்தவரை ஊத்து (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 3 சென்டி மீட்டர், காக்காச்சி (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 2 சென்டி மீட்டர், ராமநதி அணைப் பகுதி (தென்காசி) தலா 1 சென்டி மீட்டர். என்ற அளவிலும் மழை கொட்டி உள்ளது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications