அடுத்த 2 மணி நேரம்.. தூத்துக்குடி, கோவை உள்பட 10 மாவட்டங்கள்.. கொட்டப்போகும் மழை.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, நீலகிரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்காசியில் நேற்று ஒருசில இடங்களில் மழை பெய்தது. இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் ஒருசில இடங்களில் மழை பெய்தது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்று இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, இன்று இரவு 10 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நேற்று காலை (26.07.2024) 08:30 மணியளவில் மேற்கு வங்காளத்தை ஒட்டிய வடக்கு வங்ககடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நிலபகுதியை நோக்கி நகர்ந்து, இன்று காலை (27.07.2024) மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓடிசா பகுதியில் நிலவுகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 29ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30 முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய வெப்பநிலை 35 லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 28"செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications