அடுத்த 1 மணி நேரத்திற்கு.. மழையோ மழை தான்.. 13 மாவட்டங்களுக்கு குளுகுளு அப்டேட் தந்த வானிலை மையம்
சென்னை: தமிழத்தில் அடுத்த 1 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று மாலையில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்றும் கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், நெல்லை, தேனி, தென்காசி, திண்டுக்கல், குமரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதனால் தமிழகத்தில் கோவை, நீலகிரியில் மழைக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் மீட்பு படையினரும் கோவை, நீலகிரிக்கு விரைந்துள்ளனர். தென் மேற்கு பருவமழை நடப்பு ஆண்டில் சீக்கிரமாகவே தொடங்கியிருக்கிறது. இதனால் கேரளா எல்லைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தான் தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை குமரி, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 13 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதனால் ஒருசில இடங்களில் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஒருசில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு வாரம்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று 24-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25-05-2025 மற்றும் 26-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28-05-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29-05-2025 மற்றும் 30-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 19-05-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 மீட்டர் வேகத்திலும், வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20-05-2025 முதல் 23-05-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: 19-05-2025: தெற்கு ஆந்திரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் இப்பகுதிகளுக்கு செல்ல மீனவர்கள் வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications