அடுத்த 3 மணி நேரம்.. சென்னை, திருவள்ளூர் உள்பட 14 மாவட்டங்களுக்கு 'அலர்ட்'.. வானிலை மையம்
சென்னை: சென்னையில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பருவமழை வெளுத்து வாங்குகிறது. இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக் கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இன்றும் சென்னையில் நல்ல மழை பெய்தது. இதனால் தாழ்வான பல இடங்களிலும் தண்ணீர் குளம் போல தேங்கியது. தேங்கிய மழை நீரை உடனுக்கு உடன் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலன இடங்களில் வெள்ள நீர் வழிந்தோடியது. சென்னையில் தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது நள்ளிரவு 1 மணி வரை சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் தெரிவிக்கையில், இன்று முதல் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று கூறியிருந்தது. குறிப்பாக டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
வரும் 2-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 27 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 3 ஆம் தேதி அன்று புயல் சின்னமாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications