வெயிலுக்கு பிரேக்.. விட்டு விளாசப் போகுது மழை.. சென்னை முதல் குமரி வரை 19 மாவட்டங்களுக்கு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் காலை மற்றும் மதிய நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தென்காசி, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மதிய நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக செப்டம்பர் மாதத்திலும் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. மக்கள் வெளியில் செல்லவே அச்சப்படும் அளவுக்கு வெயில் தீ போன்று விட்டு விளாசுகிறது.

Chance of rain in 19 districts from Chennai to Kanyakumari No scorching heat - IMD Predicts

அடுத்த 2 மணி நேரம்

இது தொடர்பாக நெல்லை மக்களும் பேன் போட்டால் காற்று வரவில்லை தீ தான் வருகிறது, அந்த அளவுக்கு வெயில் தீயாக இருப்பதாக கூறி வருகிறார்கள். சென்னையிலும் பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இன்று மாலையிலும் சென்னையில் நுங்கம்பாக்கம், எழும்பூர், வடபழனி, புரசைவாக்கம் பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, குமரி, மதுரை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தேனி, சிவகங்கை, நீலகிரி, விருதுநகர், கோவை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, திருப்பூர் ஆகிய 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை வெள்ளிக்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் முதல் 8 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னயில் நாளை மழைக்கு வாய்ப்பு

9 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+