அடுத்த 1 மணி நேரம்.. சேலம், தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம்
சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்த நிலையில் தற்போது, தமிழகம் - ஆந்திரா இடையே நகரத் தொடங்கியிருக்கிறது. இதனால், நாளை மற்றும் நாளை மறுநாள் வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில், அடுத்த 1 மணி நேரத்தில் தமிழகத்தில் சேலம், நாமக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவை நோக்கி சென்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி திரும்புகிறது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வட தமிழகத்தை நோக்கி நகருகிறது. நாளை 24 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை அருகே வர வாய்ப்பு உள்ளது. இதனால் வட தமிழகம் மற்றும் ஆந்திரா கடற்கரை பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

குறிப்பாக, நாளை மற்றும் நாளை மறுநாள் வட தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகாலையில் பனிமூட்டம் லேசான நிலையில் காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதேபோன்று சென்னை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டன. திடீர் காற்றுடன் மழைப் பொழிவு இருக்கும் என்பதால் 3-ம் எண் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டது.
சென்னை வானிலை ஆய்வு மையமும் வரும் 28 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தது. நேற்று விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்திருந்தது. திருச்சி, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் மழை பெய்து இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை சேலம், தூத்துக்குடி, நாமக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications