சென்னையில் இன்று கொட்டப்போகும் மழை! கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் வானிலை மையம் ஜில் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இன்று மற்றும் நாளை மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனினும் ஒருசில இடங்களில் மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. எனினும் மதியம் மற்றும் காலை நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.

ஒரு வாரத்திற்கு மழை: இந்த நிலையில் இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 17.06.2024 முதல் 21.06.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.06.2024 மற்றும் 23.06.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்றும் அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 17.06.2024 முதல் 21.06.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2° 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில் எப்படி?: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்: 17.06.2024 முதல் 21.06.2024 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: 17.06.2024: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 18.06.2024 மற்றும் 19.06.2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20.06.2024: தெற்கு - மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 21.06.2024: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: 20.06.2024 மற்றும் 21.06.2024: கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட அதிகமாகவும் / இயல்பை ஒட்டியும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 39.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வடதமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34° 39° செல்சியஸ், தென்தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38° 39° செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° 39° செல்சியஸ், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் 31° 36° செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 21° பதிவாகியுள்ளது. 27° செல்சியஸ்
அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 38.7° செல்சியஸ் (+1.2° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 38.8° செல்சியஸ் (+1.6° செல்சியஸ்) பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
மழை அளவு: கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 7, மரக்காணம் (விழுப்புரம்), ஆரணி (திருவண்ணாம ARG தலா 6, குமாரபாளையம் (நாமக்கல்) 5, செங்குன்றம் (திருவள்ளூர்), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), காட்பாடி (வேலூர்), திருத்தணி (திருவள்ளூர்) தலா 4, அழகரை எஸ்டேட் (நீலகிரி), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), ஆரணி (திருவண்ணாமலை), மேட்டுப்பட்டி (மதுரை), மேட்டூர் (சேலம்), காரைக்குடி (சிவகங்கை),
வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), திருமயம் (புதுக்கோட்டை) தலா 3, வேலூர் (வேலூர்), பெரியபட்டி (மதுரை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), சின்கோனா (கோயம்புத்தூர்), குன்னூர் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), செய்யூர் (செங்கல்பட்டு), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), டேனிஷ்பேட்டை (சேலம்), அம்முண்டி (வேலூர்), சோளிங்கர் (ராணிப்பேட்டை), பர்லியார் (நீலகிரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி) தலா 2, உத்திரமேரூர் (காஞ்சிபுரம்),
மேலாலத்தூர் (வேலூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்), குடியாத்தம் (வேலூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), RSCL வல்லம் (விழுப்புரம்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), ஏற்காடு (சேலம்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), சோழவரம் (திருவள்ளூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), போளூர் (திருவண்ணாமலை), திண்டிவனம் (விழுப்புரம்), பொன்னை அணை (வேலூர்), குடிமியான்மலை (புதுக்கோட்டை) தலா 1. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்











Click it and Unblock the Notifications