இன்னும் ஒரு வாரத்திற்கு குடை அவசியம் மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த ஜில் அப்டேட்
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 7 நட்களுக்கு மழை பெய்யும் என்றும், இன்று செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இரவு நேரங்களில் மழை கடந்த சில நாட்களவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து சற்று இதமான சூழல் நிலவி வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 7 நட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 17.09.2023 அன்று, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (18.09.2023): தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19.09.2023 மற்றும் 20.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.09.2023 முதல் 23.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழை?: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு என்னவென்றால், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 17.09.2023: வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: 17.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
18.09.2023: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்; 17.09.2023: கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
மழை அளவு: கடந்த 24.மணி நேரத்தில் பதிவான மழை அளவு சென்டிமீட்டரில்: நிண்டிவளம் (விழுப்புரம்), இருக்குணீ (திருவள்ளூர்) தலா 14, மரக்காணம் (விழுப்புரம் 11. SCL-கஞ்சனூர் (விழப்புரம்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) தஙா R, RSCL-2 நேமூர் (விழுப்புரம்), ஆற்காடு ராணிப்பேட்டை), நாமரைப்பாக்கம் (திருவாளூர்), அம்பத்தூர் (சென்னை), வாலாஜா, (ராணிப்பேட்டை), பூண்டி திருவள்ளூர் கத்திவாக்கம் (சென்னை) திருவள்ளூர். திருத்தணி சT (திருவள்ளூர். நிருவாயங்காடு திருவள்ளூர்), ராணிப்பேட்டை, தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது.
வெம்பாக்கம் (திருவண்ணாமலை), அரக்கோணம் (முாணிப்பேட்டை), பெரம்பூர் (சென்னை), செய்பூர் (செங்கல்பட்டு), KSCL வல்லம் (விழுப்புரம்), வளசரவாக்கம் (சென்னை), பள்ளிக்கரனை ANG (சென்னை) நலா வந்தவாரி திருவண்ணாமலை. அண்ணாநகர் (சென்னை மகாபலிபுரம் (செங்கல்பட்டு) ஊத்துக்கோட்.ை (இருவள்ளூர்) அலுவலகம் (சென்னை), அயனாவரம் தாதுகா அலுவலகம் (சென்னை), RSCL-3 ஆனந்தபுரம் (விழப்புரம்) மதுரவாயல் (சென்னை), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), மலர்காணி (சென்னை), மயூராந்தகம் (செங்கல்பட்டு, சோழவரம் (ஒருவளனார்), ஆம்பூர் (இருப்பத்தார்), கோடம்பாக்கம் (சென்னை), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), தாம்பரம் (செங்கல்பட்டு, அடையார் சுற்றுச்குரல் பூங்மா (சென்னை), I சென்னை AWS, YMCA நந்தனம், பூந்தமல்லி ஏஆர்ஜி (திருவள்ளூர்) தலா 5 செமீ மழை பெய்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), பெருங்குடி (சென்னை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை). அம்முண்டி (வேலூர்), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), அம்மூர் வாலாஜா இரயில்வே (ராணிப்பேட்டை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருவொற்றியூர் (சென்னை). வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), செய்யார் (திருவண்ணாமயை? வானூர் விழுப்புரம்: HSCL-2 முண்டியம்பாக்கம் விழுப்புரம், ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) செங்குன்றம் (திருவள்ளூர்) பூந்தமல்லி (திருவள்ளூர்), மேலாலத்தூர் (வேலூர்),
SCL வளத்தி (விழுப்புரம்), எம்ஜிஆர் நகர் (சென்னை) புதுக்கோட்டை, புதுச்சேரி தவா ஆரணி திருவண்ணாமலை), சென்னை விமான நிலையம் போளூர் திருவண்ணாமலை), ராயபுரம் சென்னை), காஞ்சிபுரம், ஆயந்தார். (சென்னை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் ராணிப்பேட்டை) முகலிவாக்கம் (சென்னை), காட்பாடி (வேலூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), கோழிப்போர்விளை. (கன்னியாகுமரி), கொளத்தூர், (சென்னை), பெருங்குடி (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), வாளநரம் (சென்னை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு),
தண்டையார்பேட்டை (சென்னை) ASCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்). ஆவர் திருப்பூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), RSCL-E மெடார் (விழுப்புரம், வேதார், செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), ஜமுனாமாக்கார் (நிறவண்ணாமலை) செங்கல்பட்டு, செஞ்சி (விழப்புரம்), திருப்போரூர் (செங்கல்பட்டு) மணலி (சென்னை), அடையார் (சென்னை) பொண்னை அணை (வேலூர்), குறிற்துறை (கன்னியாகுமரி), திரு.வி.கே.நகர் (சென்னை) குடியாத்தும் (வேதூர்), பளப்பாக்கம் (ராணிப்பேட்டை), மீனம்பாக்கம் (சென்ளை) வம்பன் KVKAWS (புறக்கோட்டை), ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் AG (செங்கல்பட்டு) தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications