கனமழை நோ சான்ஸ்.. கிளைமேட் மாறுதே! அடுத்த 7 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு! சென்னை நிலவரம் என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 11 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 05.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06.10.2023 மற்றும் 07.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.10.2023 மற்றும் 09.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10.10.2023 மற்றும் 11.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) தலா 5, திரு.வி.கே.நகர் (சென்னை), கொட்டாரம் (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), ஆரணி (திருவண்ணாமலை) தலா 4, அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), கன்னியாகுமரி, சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), பெரம்பூர் (சென்னை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), ஆண்டிபட்டி (மதுரை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), காக்காச்சி (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்) தலா 3, தாம்பரம் (செங்கல்பட்டு), அண்ணாநகர் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம், நிலக்கோட்டை (சென்னை), இந்துஸ்தான் பல்கலை ARG (காஞ்சிபுரம்), அடையாமடை (கன்னியாகுமரி), குளச்சல் (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), வாடிப்பட்டி (மதுரை), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), பாபநாசம் (திருநெல்வேலி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), செய்யார் (திருவண்ணாமலை), போளூர் (திருவண்ணாமலை) தலா 2, VIT சென்னை AWS (செங்கல்பட்டு), ஆலந்தூர் (சென்னை), அம்பத்தூர் (சென்னை), தண்டையார்பேட்டை (சென்னை), மாதவரம் (சென்னை), ராயபுரம் (சென்னை), கொளத்தூர் (சென்னை), தேனாம்பேட்டை (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), பெருங்குடி (சென்னை), ஐஸ் ஹவுஸ் (சென்னை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பாலமோர் (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), புழல் ARG (திருவள்ளூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வேலூர் (வேலூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications