தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மழை இருக்கு.. ஆனால் வெயிலும் வாட்டி வதைக்கும்.. வானிலை மையம் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 21 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலையானது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்ச வெப்பநிலையாக 36 - 37 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. வெளியில் சென்றாலே வியர்த்து கொட்டுகிறது. இப்படி இருக்கையில் அவ்வப்போது மழை வந்து சற்று ஆறுத கொடுக்கிறது.

weather rain chennai

வெயிலும் மழையும்..

அந்த வகையில் தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி வரை அதாவது இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் வெயிலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் இன்றும் நாளையும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் அதிகபட்ச வெப்பநிலையாக 36 - 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

21 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்

"மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வெயில் அதிகரிக்கும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (16-04-2025) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: 15-04-2025 மற்றும் 16-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 17-04-2025 முதல் 19-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 15-04-2025 மற்றும் 16-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 17-04-2025 முதல் 19-04-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை.

பதிவான மழை அளவு (செமீ):

* குந்தா பாலம் (நீலகிரி) 6,
* தாளவாடி (ஈரோடு) 5,
* ஓமலூர் (சேலம்), ஆனைப்பாளையம் (கரூர்), ஒகேனக்கல் (தர்மபுரி), * மொடக்குறிச்சி (ஈரோடு), சென்னிமலை (ஈரோடு) தலா 4,

* கழுகுமலை (தூத்துக்குடி), க.பரமத்தி (கரூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), வெள்ளக்கோயில் (திருப்பூர்), சந்தியூர் KVK AWS (சேலம்), கவுந்தப்பாடி (ஈரோடு), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), மேட்டூர் (சேலம்), நல்லதங்கால் நீர்த்தேக்கம் (திருப்பூர்), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), எமரால்டு (நீலகிரி), குமாரபாளையம் (நாமக்கல்), அடையாமடை (கன்னியாகுமரி) தலா 3,

* குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), மணிமுத்தாறு (திருநெல்வேலி), பவானி (ஈரோடு), கொடுமுடி (ஈரோடு), கோத்தகிரி (நீலகிரி), கின்னக்கோரை (நீலகிரி), பாலமோர் (கன்னியாகுமரி, கரூர் (கரூர்), காக்காச்சி (திருநெல்வேலி), மேட்டூர் AWS (சேலம்), ஊத்து (திருநெல்வேலி), பி.என்.பாளையம் ARG (கோயம்புத்தூர்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), ஆண்டிபட்டி (மதுரை), கேத்தி (நீலகிரி), பரமத்திவேலூர் (நாமக்கல்), செங்கம் (திருவண்ணாமலை) தலா 2 செமீ மழை பெய்துள்ளது.

குன்னூர் PTO (நீலகிரி), காங்கேயம் (திருப்பூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் (திருப்பூர்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), ஆழியார் (கோயம்புத்தூர்), ஈரோடு PTO (ஈரோடு), அவலாஞ்சி (நீலகிரி), அரவக்குறிச்சி (கரூர்), குழித்துறை (கன்னியாகுமரி), பெருந்துறை (ஈரோடு), திண்டுக்கல் (திண்டுக்கல்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்), குன்னூர் AWS (நீலகிரி), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), அன்னூர் (கோயம்புத்தூர்), அம்மாபேட்டை (ஈரோடு), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), நிலக்கோட்டை (திண்டுக்கல்) தலா 1 செமீ மழை பெய்துள்ளது.

வெப்பநிலை நிலவரம்:

* அதிகபட்ச வெப்பநிலை :- ஈரோடு: 38.6° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி : 16.5° செல்சியஸ்
* கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-5° செல்சியஸ் உயர்ந்துள்ளது.

* தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33-39° செல்சியஸ், தென்தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-36° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 21-29° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+