இன்று மட்டும்தான் மழை.. கோடை வாடை லைட்டா அடிக்குதே! தமிழ்நாட்டில் அடுத்த 6 நாள் வறண்ட வானிலை தான்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலையே தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று பிப்ரவரி 3 ஆம் தேதியான இன்று தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 - 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்): கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்) தலா 2, கோடநாடு (நீலகிரி) 1. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications