நடுங்கும் குளிர்.. அட மழைக்கு கூட வாய்ப்பு இருக்காம்! இன்றைய வெதர் அப்டேட் இதோ
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இன்று பரவலாக பனிமூட்டம் இருக்கும் என்றும், சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதாவது, "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

ஜன.5 மற்றும் 6ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஜன.7ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜன.8ம் தேதி கூடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜன.9ம் தேதி வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மழைப்பொழிவை பொறுத்தவரை, கடந்த அக்டோபர் தொடங்கி டிச.31 வரை எதிர்பார்த்ததை விட அதிக மழை பதிவாகியிருந்தது. ஆனால், ஜன.1 தொடங்கி இன்றய தேதி வரை மழையின் அளவுக்கு 28% குறைந்திருக்கிறது. திருநெல்வேலியில் மட்டும் 4.2 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications