வெயிலும் இருக்கு..! மழையும் இருக்கு..! தமிழகத்தில் இன்று கிளைமேட் எப்படி? வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 20 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் வெப்பநிலையும் இயல்பு நிலையில் இருந்து 2 - 3 டிகிரி வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழையும், வெயிலும் மாறி மாறி என கிளைமேட் இருந்து வருகிறது. குறிப்பாக டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. காலையில் இருந்து மதியம் வரை வெயில் கொளுத்தி எடுக்கிறது. பிறகு மதியத்திற்கு பின் மழை பெய்யத் தொடங்குகிறது.

இன்றும் மழைக்கு வாய்ப்பு
இப்படியே ஒரு வாரமாக தொடர்ந்து மாறி மாறி கிளைமேட் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் இரவு கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. இதேபோன்று கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், தென்காசி, நெல்லை, குமரி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், வெப்பநிலையும் இரண்டு முதல் 3 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதே போன்று நாளை (16-04-2025) முதல் 20-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் கிளைமேட் எப்படி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (15-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 - 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 16-04-2025 முதல் 18-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. நாளை முதல் 18-04-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை ஏதும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications