இனி ரியல் சரவெடி.. செவ்வாய் முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 2 நாட்கள் கனமழை பிரிச்சு எடுக்கப்போகுது
சென்னை: 14 ஆம் தேதி முதல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 12.11.2023 மற்றும் 13.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14.11.2023 மற்றும் 15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
16.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17.11.2023 மற்றும் 18.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 - 33 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 5, கிளானிலை (புதுக்கோட்டை), மண்டபம் (ராமநாதபுரம்), மணியாச்சி (தூத்துக்குடி), கயத்தார் (தூத்துக்குடி) தலா 4, ஆயிக்குடி (தென்காசி), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), பாம்பன் (ராமநாதபுரம்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி) தலா 3, பாபநாசம் (திருநெல்வேலி), ஆயிங்குடி (புதுக்கோட்டை), கடனா அணை (தென்காசி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி) 2, தானியமங்கலம் (மதுரை) 2, ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்)2, நாகுடி (புதுக்கோட்டை) தலா 2, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), மேலூர் (மதுரை), கடம்பூர் (தூத்துக்குடி), திருவாடானை (ராமநாதபுரம்), மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), பேராவூரணி (தஞ்சாவூர்), புலிப்பட்டி (மதுரை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பெரியாறு (தேனி), இளையாங்குடி (சிவகங்கை) 1, சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி) 1, தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), எச்சன்விடுதி (தஞ்சாவூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), சங்கரன்கோயில் (தென்காசி), அதிராமபட்டினம் AWS (தஞ்சாவூர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), எழுமலை (மதுரை), ஊத்து (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி), நம்பியாறு அணை (திருநெல்வேலி), பள்ளமோர்குளம் (ராமநாதபுரம்), நாங்குனேரி (திருநெல்வேலி), இடையப்பட்டி (மதுரை) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications