வான வேடிக்கைக்கு ரெடியா.. 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்துகட்டும்! சென்னைக்கும் வானிலை மையம் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Chances of Rain in 11 district of Tamilnadu - Chennai met alert

15.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

16.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

18.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

19.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தேக்கடி (தேனி) 10, களியல் (கன்னியாகுமரி) 8, திற்பரப்பு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 6, மணமேல்குடி (புதுக்கோட்டை), தென்காசி, மிமிசல் (புதுக்கோட்டை) தலா 5, பாலமோர் (கன்னியாகுமரி), வாடிப்பட்டி (மதுரை), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), சாத்தியார் (மதுரை) தலா 4, செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை) 3, சிற்றாறு (கன்னியாகுமரி), வடகுத்து (கடலூர்), சிவலோகம் (கன்னியாகுமரி), குப்பணம்பட்டி (மதுரை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), ராஜபாளையம் (விருதுநகர்), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), திண்டிவனம் (விழுப்புரம்), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), RSCL கோலியனூர் (விழுப்புரம்), மஞ்சளாறு (தேனி), குழித்துறை (கன்னியாகுமரி), ஆண்டிபட்டி (மதுரை), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்) தலா 2, திருவாடானை (ராமநாதபுரம்), திண்டுக்கல், RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), சோலையார் (கோயம்புத்தூர்), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), சுருளகோடு (கன்னியாகுமரி), சேத்தியாத்தோப்பு (கடலூர்), சிவகிரி (தென்காசி), புவனகிரி (கடலூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), மண்டலம் 5 சோழிங்கநல்லூர் (சென்னை), திருமங்கலம் (மதுரை), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), பெரியாறு அணை (விருதுநகர்), மண்டலம் 4 பெருங்குடி (சென்னை), செஞ்சி (விழுப்புரம்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), வத்திராயிருப்பு (விருதுநகர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம், VIT சென்னை AWS (செங்கல்பட்டு), மண்டலம் 3 அடையார் (சென்னை), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), நகுடி (புதுக்கோட்டை), தக்கலை (கன்னியாகுமரி), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அரபிக்கடல் பகுதிகள்: 14.10.2023 மற்றும் 15.10.2023: லட்சதீவு பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+