குட் நியூஸ்..டெல்டாவில் “டமால் டுமீல்” -சென்னைக்கு ட்ரீட் இருக்கு! 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் கனமழையும், சென்னையிலும் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.07.2023 முதல் 16.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அரியலூர் 6, அம்முண்டி (வேலூர் மாவட்டம்), வாலாஜா (இராணிப்பேட்டை மாவட்டம்), மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) தலா 5, அம்மூர் வாலாஜா ரயில்வே (ராணிப்பேட்டை மாவட்டம்), சத்யபாமா உட்டி ஆர்க் (செங்கல்பட்டு மாவட்டம்) தலா 4, ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்), கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம்), செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, ஆலந்தூர் (சென்னை மாவட்டம்), சென்னை விமான நிலையம் (சென்னை மாவட்டம்), காட்டு மன்னார் கோயில் (கடலூர் மாவட்டம்), எண்ணூர் AWS (திருவள்ளூர் மாவட்டம்) , வெம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) தலா 3, ஆற்காடு (ராணிப்பேட்டை மாவட்டம்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை மாவட்டம்), புது வேட்டக்குடி (பெரம்பலூர் மாவட்டம்), கீழ அணைக்கட்டு (தஞ்சாவூர் மாவட்டம்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்), காஞ்சிபுரம், CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை மாவட்டம்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்), கொரட்டூர் (திருவள்ளூர் மாவட்டம்), மணல்மேடு (மயிலாடுதுறை மாவட்டம்) தலா 2, சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை மாவட்டம்), புவனகிரி (கடலூர் மாவட்டம்), திருப்போரூர் (செங்கல்பட்டு மாவட்டம்), குப்பநத்தம் (கடலூர் மாவட்டம்), சின்னகளார் (கோவை மாவட்டம்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்), சீர்காளி (மயிலாடுதுறை மாவட்டம்), நந்தியார் தலைமை (திருச்சி மாவட்டம்), விருத்தாசலம் AWS (கடலூர் மாவட்டம்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்), பனப்பாக்கம் (இராணிப்பேட்டை மாவட்டம்), லால்பேட்டை (கடலூர் மாவட்டம்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை மாவட்டம்), மாதவரம் AWS (திருவள்ளூர் மாவட்டம்), தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்), விருதாச்சலம் (கடலூர் மாவட்டம்), லக்கூர் (கடலூர் மாவட்டம்), செம்பரபாக்கம் (திருவள்ளூர் மாவட்டம்), எம்ஜிஆர் நகர் (சென்னை மாவட்டம்), புள்ளம்பாடி (திருச்சி மாவட்டம்)), விரிஞ்சிபுரம் AWS (வேலூர் மாவட்டம்), சோளிங்கர் (இராணிப்பேட்டை மாவட்டம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்), வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்), செய்யார் (திருவண்ணாமலை மாவட்டம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர் மாவட்டம்), காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர் மாவட்டம்), மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்), டிஜிபி அலுவலகம் (சென்னை மாவட்டம்), விரகனூர் அணை (மதுரை மாவட்டம்), அண்ணாமலை நகர் (கடலூர் மாவட்டம்), வால்பாறை PTO (கோவை மாவட்டம்), பொன்னேரி (திருவள்ளூர் மாவட்டம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர் மாவட்டம்), சிதம்பரம் AWS (கடலூர் மாவட்டம்) தலா 1 செண்டிமீட்டர் அளவில் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்றும் நாளையும் வட தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12 ஆம் தேதி இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

13 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் 12 ஆம் தேதி இலட்சத்தீவு பகுதிகள், வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications