அனலுக்கு நடுவே.. இடி, மின்னலுடன் மழை வெளுக்க போகுது.. அடுத்த 2 நாட்களுக்கு அலர்ட்.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் 65 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இனி ஒரு வாரத்துக்கு இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தகிக்கும் அனலுக்கு மத்தியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருக்கிறது.

குறிப்பாக நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அதே நேரத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் கிளைமேட் எப்படி இருக்கும் என்ற அறிவிப்பினை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
பதிவான மழை அளவு (செமீ):
* சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 3,
* வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்). அவலாஞ்சி (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 2.
* சோலையார் (கோயம்புத்தூர்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்). மேல் பவானி (நீலகிரி), தேவாலா (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்) தவா 1.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலை:- கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை: மதுரை விமான நிலையம்: 39.4° செல்சியஸ்.
அடுத்த 7 நாட்கள்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 08-07-2025 மற்றும் 09-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
10-07-2025 முதல் 14-07-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: 08-07-2025 முதல் 10-07-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 08-07-2025 முதல் 10-07-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
08-07-2025 முதல் 10-07-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3" செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னையில் 2 நாட்கள்
இன்று (08-07-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (09-07-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை இருக்கக்கூடும். காணப்படும். நகரின் ஒருசில அதிகபட்ச வெப்பநிலை 38-39" 29-30° செல்சியஸை ஒட்டியும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 08-07-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
09-07-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 10-07-2025 முதல் 12-07-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்:
08-07-2025: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல், மத்தியமேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
09-07-2025: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10-07-2025: மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11-07-2025: மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12-07-2025: மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
08-07-2025 முதல் 11-07-2025 வரை: மத்தியமேற்கு, அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கொங்கன் கோவா - கர்நாடக கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12-07-2025: மத்தியமேற்கு, அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications