Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு ஹெவி அலர்ட்.. சீறிப் பாயும் செம்பரம்பாக்கம் நீர்.. விநாடிக்கு 1500 கன அடி நீர் திறப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தாலும் சமாளிப்பதற்காக முன்கூட்டியே உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

Chembarambakkam Lake water opening increased to 1500 cubic meter: Flood Warning to chennai

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர் இருப்பை கண்காணிக்கும் பணிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக திகழும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று காலை 10 மணி முதல் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் விநாடிக்கு 1500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. முன்னதாக இன்று காலை முதல் 1000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகளவில் உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும். எனவே ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு ஹை அலர்ட்.. அபாய கட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரி! 9 மணிக்கு வெளியேறும் 1000 கனஅடி நீர்


இதேபோல, புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. புழல் ஏரியில் உபரி நீர் திறக்கப்படும் கால்வாய்க்கு அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. நாரவாரிக்குப்பம், வடகரை, கொசப்பூர் மணலி புதூர் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சடையங்குப்பம், கிராண்ட் லைன் உள்ளிட்ட பகுதி மக்கள் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+