‛‛மாறிய கிளைமேட்’’.. சென்னையில் இரவு முதல் தொடரும் மழை.. அடுத்த 6 நாள் வானிலை எப்படி இருக்கும்?
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதோடு இன்று முதல் அடுத்த 6 நாளுக்கான வானிலை நிலவரம் எப்படி இருக்கும்? என்பது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தான் தமிழகத்தில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தென்காசி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதி கனமழை வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முல் மிக கனமழை பெய்ய உள்ளது. அதோடு தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை
சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், வடபழனி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் காலை வரையிலான நேரம் எங்களுக்கானது'' என மழை பற்றி தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 6 நாட்கள் சென்னையின் வானிலை நிலவரம் என்ன? என்பது பற்றிய முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது.
அதன்படி இன்று முதல் அடுத்த 6 நாட்கள் அதாவது மே 24ம் தேதி வரை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனவும், நகரில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 35 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 26 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications