Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chennai Rain: காலையில் பூமிக்கே வந்த சூரியனை போன்ற வெயில்! மாலையில் கும்மிருட்டான சென்னை! மழை மழை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து இடியுடன் பலத்த காற்று வீசி வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. இன்று காலை முதலே வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் மேகக் கூட்டங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

weather rain chennai

கடல் காற்றும் நிலப்பகுதியை நோக்கி வீசி வருகிறது. இதனால் சென்னையில் சில பகுதிகளில் மழை பெய்யும். இரவு நேரத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தை பொருத்தமட்டில் கடந்த இரு தினங்களாக இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்து வருகிறது.

கொங்கில் மழை

அது போல் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய உள்மாவட்டங்களிலும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்னொரு ரவுண்ட் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

சுட்டெரித்த வெயில்

சென்னையில் இன்று காலை 8 மணிக்கெல்லாம் 12 மணி வெயில் போல் சுட்டெரித்தது. வானமும் தெளிவாகவும் அதிக பிரகாசமாகவும் இருந்தது. இதனால் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 5 மணி முதலே வானம் இருட்டிக் கொண்டுவிட்டது. தற்போது இரவு 7 மணி போல் ஆங்காங்கே காட்சியளிக்கிறது. இடி சப்தமும் அச்சம் கொள்ள வைக்கிறது.

அதிக காற்றும்

அதிக காற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் அவ்வப்போது வரும் மின்னலும் என சென்னையின் கிளைமேட் மாறியுள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது அல்லது இறுதி வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதற்கு முன்னதாகவே வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம், குறைந்த காற்றழுத்தம் போன்ற இயற்கை நிகழ்வுகளால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

வானிலை அறிக்கை

சென்னை வானிலை மையத்தின் அறிக்கையின்படி இன்றைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என தெரிவித்துள்ளது.

எங்கெல்லாம் மழை

அது போல் 19ஆம் தேதியான நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அது போல் 20, 21, 22 ஆகிய தேதிகளிலும் தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே 22 ஆம் தேதி வரை வெளியே செல்லும் போது குடையும், ரெயின் கோட்டும் அவசியமாக எடுத்துச் செல்ல வேண்டும். மாலை வேளைகளிலும் இரவு நேரங்களிலும்தான் இந்த மழை பெய்யும் என்பதால் மழை நின்றதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். எனவே மக்கள் அதற்கேற்ப உங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+