வரலாறு படைக்க போகுது.. சென்னை, வடதமிழ்நாட்டில் வானிலையில் மாபெரும் மாற்றம்.. வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று பிற்பகலில் இருந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள வானிலை கணிப்பில்,

சென்னை மற்றும் வடதமிழ்நாட்டில் கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை மற்றும் வட தமிழ்நாடு வரலாற்று சிறப்புமிக்க ,மழையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது . செப்டம்பரில் இல்லாத சிறப்புமிக்க மழையை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.
திருவள்ளூர், விழுப்புரத்தில் இது சிறப்பான நாள். மழை இங்கே செஞ்சுரி அடித்துள்ளது. வட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இன்றிரவும் மழையில் எந்த வித்தியாசமும் இருக்காது. இம்முறை கடலூர், டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளான மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி பெல்ட் ஆகிய அனைத்து பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கணிப்பில், நேற்று (15.09.2023) காலை கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. 2.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
16.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம். திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18.09.2023 முதல் 20.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.09.2023 மற்றும் 22.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னதுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 6, பொன்னேரி (திருவள்ளூர்) 5, கத்திவாக்கம் (சென்னை) 4. பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), அரிமளம் (புதுக்கோட்டை), மேட்டூர் (சேலம்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்). தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) தலா 3. குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), வொர்த் எஸ்டேட் செருமல்லி (நீலகிரி), புழல் ARG (திருவள்ளூர்). ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), திருவள்ளூர். அவலாஞ்சி (நீலகிரி), விராலிமலை (புதுக்கோட்டை). சோழவரம் (திருவள்ளூர்), Rsd-2 நெமர் (விழுப்புரம்), மணலி (சென்னை), புழல் (திருவள்ளூர்) தலா 2, கன்னியாகுமரி, கொட்டாரம் (கன்னியாமைரி), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்). வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்),
அழகரை எஸ்டேட் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), திரூர் Kvk Aws ( திருவள்ளூர்], வால்பாறை PAP (கோயம்புத்தூர்), முகையூர் (விழுப்புரம்), ஆவடி (திருவள்ளூர்), வால்பாறை தாலுகா (கோயம்புத்தூர்). வானூர் (விழுப்புரம்), மயிலாடி (கன்னியாகுமரி), மணம்பூண்டி (விழுப்புரம்), அலுவலகம் கிளாணிலை (புதுக்கோட்டை), ஆனைமடுவு அணை (சேலம்), நீடாமங்கலம் (திருவாளர்). இரணியல் (கன்னியாகுமரி), நெய்வாசல் தென்பதி (தஞ்சாவூர்), கில் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), ஆர்எஸ்எல் - 2 கேதார் (விழுப்புரம்), ஏதாப்பூர் (சேலம்). பூண்டி (திருவள்ளூர்), ஹரிசன் மலையாள லிமிடெட் (நிலகிரி), கொடைக்கானல் படக குழாம் (திண்டுக்கல்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்: 15.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 18.09.2023: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: 16.09.2023 மற்றும் 17.09.2023: கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications