மிக்ஜாம்! சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு கட்டுமான பணிகளை நிறுத்துங்கள்.. பறந்த உத்தரவு!
சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்டுமான நிறுவனங்களுக்கு மாநகராட்சி துணை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வங்கக் கடலில் மிக்ஜாம் புயல் நிலவி வருகிறது. இது நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயலால் நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் கனமழையும் பலத்த காற்றும் வீசும். இதனால் சென்னையில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள்.
அது போல் கட்டுமான பணிகளுக்கான பொருட்களான ஜன்னல், கதவு, டிராலி, கம்பி, ஏணி, ஸ்டூல் உள்ளிட்டவைகளை தரை தளத்தில் பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டுமான பணிகளால் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப்படும்.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு தென் மேற்கு வங்கக் கடலில் புதுவையிலிருந்து சுமார் 630 கி.மீ. கிழக்கு- தென்கிழக்கேயும் சென்னையிலிருந்து 450 கி.மீ. கிழக்கு தென் கிழக்கிலும் நிலவுகிறது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை டிசம்பர் 3ஆம் தேதி புயலாகவும் வலுப்பெற்று, 4ஆம் தேதி காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக- புதுவை கடலோர பகுதிகளில் நிலவுக் கூடும். பிறகு கடலோர பகுதிகளை ஒட்டி வடதிசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கடக்கக் கூடும்.
கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலில் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மிக்ஜாம் புயலானது கரையை கடக்கும் நேரத்தில் சுமார் 80 முதல் 100 கி.மீ. வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 4ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக் கூடும் என்பதால் அன்றைய தினம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications