47 ஆண்டுகளில் சென்னை பார்க்காத பெரு மழை.. 2015 ஐ விட நிலைமை ரொம்ப மோசம்! வெள்ளத்தில் மூழ்கிய நகரம்
சென்னை: விடியவிடிய கொட்டித்தீர்த்த மழை கடந்த 47 ஆண்டுகளில் சென்னை சந்திக்காதது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை மிக்ஜம் புயலாக வலுவடைந்தது. சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 130 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு இருக்கும் இந்த புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய பெரு மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து இருக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு பல இடங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது. சென்னையில் இன்று அதிகாலை வரை 340 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதற்கு முன் சென்னையில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது 340 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பெய்தது.
இதை வைத்து பார்க்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை பெரு வெள்ள காலத்தில் கொட்டிய கனமழையை காட்டிலும் அதி கனமழையை இன்று சென்னை எதிர்கொண்டு உள்ளது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் நள்ளிரவு மழை பெய்து இருப்பதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு மழை பெய்தது என்ற விபரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. அதில், "கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மண்டலம் 14 பெருங்குடி (சென்னை) 29, ஆவடி (திருவள்ளூர்) 28, ஆலந்தூர் (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை) தலா 25, மண்டலம் 13 அடையார் (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை), மண்டலம் 12 மீனம்பாக்கம் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), புழல் ARG (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்) தலா 23, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), எம்ஜிஆர் நகர் (சென்னை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை) தலா 22, மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), NIOT_பள்ளிக்கரணை ARG (சென்னை), சென்னை (N) AWS (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 21, மண்டலம் 03 புழல் (சென்னை), பெரம்பூர் (சென்னை), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூர்) தலா 20, அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), தரமணி ARG (சென்னை), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), அண்ணா நகர் (சென்னை), VIT சென்னை AWS (செங்கல்பட்டு) தலா 19, சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), அம்பத்தூர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), வளசரவாக்கம் (சென்னை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), YMCA நந்தனம் ARG (சென்னை), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), கோடம்பாக்கம் (சென்னை) தலா 18, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), அம்பத்தூர் (சென்னை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) தலா 17, மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), செம்பரம்பாக்கம்-வருவாய்த்துறை (காஞ்சிபுரம்), தேனாம்பேட்டை (சென்னை), திருவள்ளூர் (திருவள்ளூர்), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), திரு.வி.க நகர் (சென்னை), மண்டலம் 03 மாதவரம் (சென்னை) தலா 16, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), திருவூர் AWS (திருவள்ளூர்), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), தண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை), எண்ணூர் AWS (சென்னை) தலா 15, மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), மண்டலம் 05 GCC (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூர்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 14, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), திருப்போரூர் (செங்கல்பட்டு), மண்டலம் 02 மணலி (சென்னை), மண்டலம் U39 அடையார் (சென்னை), செம்பரம்பாக்கம்-CMWSSB (காஞ்சிபுரம்) தலா 13, மண்டலம் D156 முகலிவாக்கம் (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), ராயபுரம் (சென்னை), மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை) தலா 12, மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), மண்டலம் U32 மதுரவாயல் (சென்னை) தலா 11,பூண்டி (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்) தலா 10, திருவொற்றியூர் (சென்னை), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), திருவாலங்காடு (திருவள்ளூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), செய்யூர் (செங்கல்பட்டு) தலா 9, வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), மின்னல் (ராணிப்பேட்டை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), மரக்காணம் (விழுப்புரம்) தலா 8, மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை) 7, திருத்தணி PTO (திருவள்ளூர்) 6, மண்டலம் 02 D15 மணலி (சென்னை), சோளிங்கர் (ராணிப்பேட்டை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை) தலா 5, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), பெருங்குடி (சென்னை), பூண்டி (திருவள்ளூர்), அடவிநயினார் அணை (தென்காசி), வந்தவாசி (திருவண்ணாமலை), ஆலந்தூர் (செங்கல்பட்டு) தலா 4 செமீ" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications