சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு எவ்வளவு? சக்கரம் தாக்குமா! வெதர்மேன் கொடுத்த அப்டேட்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் சென்னைக்கு கனமழையை கொடுக்கும் என்று பேச்சுக்கள் அடிப்படுகின்றன. இந்நிலையில், மழைக்கான வாய்ப்பு என்ன என்பது குறித்த தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
அதாவது, புயல் சென்னையை தாக்காது என்பது 99.9999% உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், கனமழையை கொடுக்குமா? என்பது குறித்து இன்னும் சந்தேகம் நீடிக்கிறது.

வாய்ப்பு 1: வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்திருக்கிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, அக்.27ம் தேதி புயலாக வலுப்பெறுகிறது. புயல் காரணமாக கனமழை இருக்கும். ஆனால் சென்னைக்கு இருக்குமா? என்பதுதான் கேள்விக்குறி. புயல் கடலிலிருந்து சென்னையை நெருங்காமல் அப்படியே ஆந்திரா பக்கம் போனால் சென்னைக்கு லேசான மழை மட்டுமே இருக்கும்.
வாய்ப்பு 2: அதுவே சென்னையை தொட்டு ஆந்திராவுக்கு போனால் சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. எப்படி இருந்தாலும் புயல் சென்னையை தாக்காது. சென்னை தொட்டு போகும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை இருக்கும் என வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
டெல்டா மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?
பொதுவாக புயல் சின்னம் உருவானால், அது தன்னை சுற்றியிருக்கும் பகுதியில் உள்ள மழை மேகங்களை ஈர்க்கும். 300-500 கி.மீ பரப்பளவில் உள்ள மழை மேகங்களை இது ஈர்க்கும். அப்படி பார்த்தால் டெல்டா மாவட்டங்களில் உள்ள மழை மேகங்களையும் இந்த புயல் ஈர்க்கும். எனவே டெல்டாவில் கனமழைக்கான வாய்ப்பு குறைவு. தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் இருக்கும். குறிப்பாக கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். மேற்குப் பகுதியில் இருந்து வரும் காற்றின் காரணமாக, தெற்கு மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், வால்பாறை மற்றும் நீலகிரி பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல வட தமிழகம் மற்றும் ஆந்திரக் கடற்கரை மீனவர்கள் அக்டோபர் 25 முதல் 28-ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications