சென்னைக்குதான் சம்பவம்.. புயல் நகரும் பாதையை வெளியிட்டது வானிலை ஆய்வு மையம்!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியான புயலாக மாறும் என்றும், இது தீவிர புயலாக வலுப்பெற்று சென்னைக்கு நேர் எதிரே நிலைகொள்ளும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பான படத்தையும் வானிலை மையம் தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த கணிப்பின்படி புயல் சென்னைக்கு அருகே நிலை கொண்டால், வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து 2 புயல்கள் உருவாகிவிட்டன. ஆனால், 2 புயல்களும் சென்னைக்கு பாதிப்பு இல்லாமல் கடந்து சென்றுவிட்டன. இப்போது உருவாகியிருப்பது 3வது புயலாகும். இதும் சென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது முழுமையாக தெரியாது. வழக்கமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புயல்கள், சென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
தெற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் புயல்கள்தான் நமக்கு சிக்கலை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது உருவாகியிருக்கும் புயல், மத்திய வங்கக்கடலிலிருந்து உருவானதாகும். இது சென்னைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியவில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
