"வரும் தம்பி.. ஆனா வராது!" தமிழகத்தில் வெளுக்கும் கனமழை! ஆனா சென்னையை பாருங்க.. கிளைமேட் எப்படி
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பெய்து வரும் நிலையில், இன்றைய தினம் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் பருவமழை ஆரம்பித்தது முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. ஹிமாச்சல் போன்ற மாநிலங்களில் பெய்தது போல ஒரே அடியாகக் கொட்டி தீர்க்கவில்லை என்ற போதிலும் கணிசமாக மழை பெய்தே வருகிறது.

அதிலும் குறிப்பாக இம்மாதம் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்தே வருகிறது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. இதற்கிடையே இன்று மழை எங்கெல்லாம் பெய்யும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
சென்னை மழை: இது குறித்து சென்னை ரயின்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "தென் தமிழ்நாடு மற்றும் டெல்டாவின் சில பகுதிகளில் மதியமே இடியுடன் கூடிய மழை ஆரம்பித்துவிட்டது. திண்டுக்கல்லில் சில இடங்கள் நல்ல மழை பெய்கிறது. விருதுநகரில் தினமும் மழை பெய்யும் நிலையில், இன்றும் அது தொடர்கிறது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் வட தமிழக மாவட்டங்களில் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. சென்னையைப் பொறுத்து வரை இன்று மழை பெய்ய 50:50 மட்டுமே வாய்ப்பு இருக்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல சென்னை ரயின்ஸ் தனது மற்றொரு ட்வீட்டில், "கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இப்போது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. வேலூர் அருகே சில மழை மேகங்கள் உருவாகி வருகின்றன" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக வானிலை மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று மாநிலத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்: இது குறித்து வானிலை ஆய்வு மையம், "தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று செப். 22 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை செப். 23இல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் செப். 24 முதல் 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்கள்: அதேபோல வரும் செப். 27இல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், செப். 28ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
-
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications