பேயாட்டம் ஆடிய பெரு மழை.. சென்னையே மூழ்கிருச்சு! 2 மணி நேரத்தில் மொத்தமாக மாறிய கதை - எங்கு அதிகம்?
சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பெரு மழையின் காரணமாக மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை கொட்டியது என்ற விபரத்தை பார்ப்போம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக நேற்று பெய்த மிக கனமழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை கொட்டியது என்ற விபரத்தை பார்ப்போம்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சென்னையில் பெய்த மழை அளவு: அதிகபட்சமாக கொளத்தூர் - 156.0, திருவிக நகர் - 149.0, அம்பத்தூர் - 147.3, புழல் - 114.9. கோடம்பாக்கம் - 116.1, மலர் காலனி - 138.0, கத்திவாக்கம் - 107.4, அத்யா சுற்றுச்சூழல் பூங்கா - 113.9, ஆலந்தூர் ஜிசிசி - 120.9. மதுரவாயல் ஜிசிசி - 119.4. தேனாம்பேட்டை ஜிசிசி - 104.7
நுங்கம்பாக்கம் - 79.4, மீனம்பாக்கம் - 97, எண்ணூர் துறைமுகம் - 56, புழல் - 118.5, திரூர் (திருவள்ளூர்) - 70.0, YMCA நந்தனம் - 103.0, அண்ணா பல்கலைக்கழகம் - 106.5, செம்பரம்பாக்கம் - 47.5, தரமணி - 84.0, நியாட் பள்ளிக்கரணை - 61.2, கொளப்பாக்கம் (காஞ்சிபுரம்) - 95.5, சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) - 70.5, VIT சென்னை AWS (செங்கல்பட்டு) - 81.0 மிமீ அளவில் மழை பெய்து உள்ளது.
அதேபோல், நேற்று இரவு 8.30 மணி வரை 24 மணி நேரம் பெய்த மழை அளவை பொறுத்தவரை, "மண்டலம் 08 மலர் காலனி, மண்டலம் 08 அண்ணாநகர்- தலா 6; மண்டலம் 12 மீனம்பாக்கம், மண்டலம் 06 திரு.வி.க.நகர், அயனாவரம் தாலுகா அலுவலகம், தண்டையார்பேட்டை - தலா 5; அண்ணாநகர், மண்டலம் 09 தேனாம்பேட்டை, மண்டலம் 05 ராயபுரம், சென்னை கலெக்டர் அலுவலகம், பெரம்பூர், மண்டலம் 06 டி65 கொளத்தூர், சென்னை (என்), சிடி மருத்துவமனை தண்டையார்பேட்டை - தலா 4 மிமீ மழை பெய்து உள்ளது.
சென்னை, மண்டலம் 03 புழல், கோடம்பாக்கம், எண்ணூர், ராயபுரம், மண்டலம் 04 தண்டையார்பேட்டை, மண்டலம் 03 மாதவரம், திரு-வி-கா நகர், மண்டலம் 01 கத்திவாக்கம், டிஜிபி அலுவலகம், திருவொற்றியூர், மாதவரம், மண்டலம் 10, U41 கோடம்பாக்கம், மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ், மண்டலம் 02 மணலி, மண்டலம் 14 பெருங்குடி, மண்டலம் 02 D15 மணலி, மண்டலம் 13 U39 அடையாறு, அம்பத்தூர், மண்டலம் 01 திருவொற்றியூர் தலா 3 மிமீ மழை கொட்டி இருக்கிறது. காஞ்சிபுரம்: குன்றத்தூர் - 4; திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி - 5; பொன்னேரி, சோழவரம் - தலா 4; புழல், ரெட் ஹில்ஸ், ஆவடி, உத்திரமேரூர், ஊத்துக்கோட்டை, கொரட்டூர், திரூர், திருவள்ளூர் தலா 3. மழை பெய்து இருக்கிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications