ரெட் அலர்ட்டை விட மோசம்.. சென்னை மீனம்பாக்கத்தில் “ரெக்கார்ட்” வைத்த அதிகனமழை! வெளுத்து வாங்கிருச்சே
சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை அளவை விட அதிக கனமழை கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித்தீர்த்து இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
வடகிழக்கு பருவ மழையை ஒட்டி கடந்த சில வாரங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் மிக கனமழை பெய்ததால் சாலைகள், பாலங்கள், சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்கின. இந்த நிலையில் மழை மூலம் சென்னை மீனம்பாக்கம் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து இருக்கிறது.

ஆம், சென்னை மீனம்பாக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26 சென்டி மீட்டர் அதி கனமழை கொட்டித்தீர்த்ததே இந்த ஆண்டில் அப்பகுதியில் பெய்த மழையின் அதிகபட்ச அளவாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பேரிடர் தடுப்பு அமைப்பு இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. வானிலை எச்சரிக்கையில் மழை பெய்யும் அளவை பொறுத்து மஞ்சள் அலர்ட், ஆரஞ்சு அலர்ட், ரெட் அலர்ட் விடுக்கப்படுவது வழக்கம்.
24 மணி நேரத்தில் 21 சென்டி மீட்டரோ அல்லது அதற்கு அதிகமாகவோ மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம். ஆனால், நேற்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கூட விடுக்கப்படாத நிலையில், சென்னை மீனம்பாக்கத்தில் 26 சென்டி மீட்டர் மழை பெய்து இருப்பது ரெட் அலர்ட் எச்சரிக்கையை விட அதிகமாகும். இதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 சென்டி மீட்டருக்கு நெருக்கமாக மழை கொட்டித்தீர்த்து இருக்கிறது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பால், "நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சென்னையில் பெய்த மழை அளவு: அதிகபட்சமாக கொளத்தூர் - 156.0, திருவிக நகர் - 149.0, அம்பத்தூர் - 147.3, புழல் - 114.9. கோடம்பாக்கம் - 116.1, மலர் காலனி - 138.0, கத்திவாக்கம் - 107.4, அத்யா சுற்றுச்சூழல் பூங்கா - 113.9, ஆலந்தூர் ஜிசிசி - 120.9. மதுரவாயல் ஜிசிசி - 119.4. தேனாம்பேட்டை ஜிசிசி - 104.7
நுங்கம்பாக்கம் - 79.4, மீனம்பாக்கம் - 97, எண்ணூர் துறைமுகம் - 56, புழல் - 118.5, திரூர் (திருவள்ளூர்) - 70.0, YMCA நந்தனம் - 103.0, அண்ணா பல்கலைக்கழகம் - 106.5, செம்பரம்பாக்கம் - 47.5, தரமணி - 84.0, நியாட் பள்ளிக்கரணை - 61.2, கொளப்பாக்கம் (காஞ்சிபுரம்) - 95.5, சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) - 70.5, VIT சென்னை AWS (செங்கல்பட்டு) - 81.0 மிமீ அளவில் மழை கொட்டித் தீர்த்தது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications